என் மலர்
உள்ளூர் செய்திகள்

சூலூர் பகுதியில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்
- ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. அரசின் செயல்பாடுகளை விமர்சித்தனர்
- ஒன்றிய வாரியாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சூலூர்,
சூலூர் சுற்றுவட்டார பகுதிகளில் சூலூர் பஸ் நிலையம், அப்பநாயக்கன்பட்டி, கருமத்தம்பட்டி, சுல்தான்பேட்டை, செஞ்சேரிமலை, பாப்பம்பட்டி, பதுவம்பள்ளி, கிட்டாம் பாளையம், காடுவெட்டி பாளையம், கருமத்தம்பட்டி சென்னி ஆண்டவர் கோவில், மாதப்பூர் ரோடு, கணியூர், சோமனூர் சந்தைப்பேட்டை முன்பு, கிருஷ்ணாபுரம் பிரிவு, க.ராயர் பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பாரதீய ஜனதாவினர் ஒன்றிய வாரியாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. அரசின் செயல்பாடுகளை விமர்சித்தனர். மேலும் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாகவும், விவசாயிகளுக்கு இந்த அரசால் நன்மை இல்லை என்றும், விசைத்தறி தொழிலாளர்களுக்கு கடுமையான நெருக்கடி ஏற்பட்டுள்ளது என கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தி.மு.க. அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டங்களில் பதுவம்பள்ளி மகேந்திரன், காடுவெட்டி பாளையம் முன்னாள் ஊராட்சி தலைவர் சதாசிவம், கருமத்தம்பட்டி மோகன், அசோக், கோவை மாவட்ட மகளிர் அணி தலைவி ரேவதி, பொதுச் செயலாளர் சத்தியமூர்த்தி, மாவட்டச் செயலாளர் இருகூர் சிதம்பரம், சூலூர் ஒன்றிய செயலாளர் ரவிக்குமார், நகரச் செயலாளர் அசோக், ரவி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பா.ஜ.க.வினர் கலந்து கொண்டனர்.






