என் மலர்
உள்ளூர் செய்திகள்

கஞ்சா வியாபாரிகள் வங்கி கணக்குகள் முடக்கம்
- கஞ்சா குற்றவாளிகள் வங்கி கணக்குகளை முடக்க உத்தரவிட்டதன்படி 35 கஞ்சா குற்றவாளிகளின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன.
- கஞ்சா மற்றும் போதை பொருள் கடத்தலில் ஈடுபட்டால் அவர்களது சொத்துக்கள் மற்றும் வங்கி கணக்குகள் முடக்கம் செய்யப்படும்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டத்தில் கடந்த ஒரு வருடத்தில் பல்வேறு கஞ்சா மற்றும் கஞ்சா குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். மேலும் கஞ்சா குற்றவாளிகள் வங்கி கணக்குகளை முடக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் உத்தரவிட்டார். அதன்படி (2021 - 2022) ஆண்டுகளில் 35 கஞ்சா குற்றவாளிகளின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன.
மீதமுள்ள கஞ்சா 9 குற்றவாளிகளின் வங்கி கணக்கினை விரைவில் முடக்கம் செய்ய வங்கிகளுக்கு அறிவுறுத்தி உள்ளார். மேலும் இதுபோன்று கஞ்சா மற்றும் போதை பொருள் கடத்தலில் ஈடுபட்டால் அவர்களது சொத்துக்கள் மற்றும் வங்கி கணக்குகள் முடக்கம் செய்யப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Next Story






