என் மலர்
உள்ளூர் செய்திகள்

தலையில் இருமுடி வைத்து சைக்கிளில் சபரிமலை செல்லும் பழனிசாமி.
சென்னையில் இருந்து சபரிமலைக்கு சைக்கிளில் புறப்பட்ட அய்யப்ப பக்தர்
- பொதுமக்கள் அனைவரும் நலமுடனும் வளமுடனும் வாழ வேண்டும்.
- கடந்த 8-ம் தேதி சென்னை வில்லிவாக்கத்தில் இருந்து சபரிமலைக்கு புறப்பட்டு சென்று கொண்டிருக்கின்றேன்.
கும்பகோணம்:
சென்னை வில்லிவா க்கத்தை சேர்ந்தவர் பழனிசாமி.
இவர் கும்பகோணம் அருகே சாலையில் இருமுடி தலையில் வைத்து சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அவரிடம் பொதுமக்கள் விசாரித்தபோது, நான் தினக்கூலி அடிப்படையில் எலக்ட்ரிகல் வேலை செய்து வருகிறேன்.
சபரிமலை ஐயப்பன் துணையாலேயே நல்ல விதமாக எனது குடும்பத்தை நடத்தி வருகின்றேன்.
17-வது வருடமாக சபரிமலை செல்லும் நான் பொதுமக்கள் அனைவரும் நலமுடனும் வளமுடனும் வாழ வேண்டும் என்பதற்காக சுமார் 650 கிலோமீட்டர் வரை சைக்கிளில் செல்ல முடிவு செய்து கடந்த 8-ம் தேதி சென்னை வில்லிவாக்கத்தில் இருந்து சபரிமலைக்கு புறப்பட்டு சென்று கொண்டிருக்கின்றேன் என்றார்.
நேற்று இரவு உணவை சோழபுரத்தில் முடித்துவிட்டு சைக்கிள் பயணத்தை தொடர்ந்தார். இன்று காலை தஞ்சாவூர், திருச்சி, கரூர், திண்டுக்கல் வழியாக சபரிமலை செல்கிறார்.






