search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பரமத்திவேலூரில் போதைப்பொருட்களால் ஏற்படும் தீமை குறித்த விழிப்புணர்வு பேரணி
    X

    விழிப்புணர்வு பேரணியை டி.எஸ்.பி.ராஜாரணவீரன் தொடங்கி வைத்த காட்சி.

    பரமத்திவேலூரில் போதைப்பொருட்களால் ஏற்படும் தீமை குறித்த விழிப்புணர்வு பேரணி

    • பரமத்திவேலூரில் போதைப்பொருட்களால் ஏற்படும் தீமை குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
    • விழிப்புணர்வு பேரணியை தொடர்ந்து போதை பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து மாணவ, மாணவிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் கஞ்சா, குட்கா, புகையிலை, பான்மசாலா உள்ளிட்ட போதை பொருட்களை உபயோகிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு பேரணி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, பரமத்திவேலூர் டி.எஸ்.பி. ராஜாரணவீரன் தலைமை வகித்து விழிப்புணர்வை பேரணியை தொடங்கி வைத்தார்.

    அப்போது அவர் கட்டணமில்லா புகார் எண் 1930 மற்றும் இணைய வழி மோசடிகளை தடுப்பது குறித்து மாணவ, மாணவிகளிடையே எடுத்துக்கூறினார்.

    முன்னதாக வேலூர் இன்ஸ்பெக்டர் வீரம்மாள், போக்சோ சட்டம், சைபர் கிரைம், மற்றும் மொபைல் போன் மூலம் பேசி பணம் பறிக்கும் மர்ம நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என மாணவ, மாணவிகளுக்கு அறிவுரை வழங்கினார். அதனை தொடர்ந்து பள்ளி மாணவர்கள் பேரணியாக சென்று குட்கா, கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை ஒழிப்போம் என கோஷமிட்டவாறு ஊர்வலமாக சென்று பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

    பரமத்தி வேலூர் அரசு உதவிபெறும் கந்தசாமி கண்டர் பள்ளியில் இருந்து தொடங்கிய பேரணி திருவள்ளுவர் சாலை, பேருந்து நிலையம், கடை வீதி உள்ளிட்ட பகுதிகள் வழியாக சென்று மீண்டும் பள்ளியை வந்தடைந்தனர்.

    Next Story
    ×