என் மலர்
உள்ளூர் செய்திகள்

கொள்முதல் செய்யப்படும் நெல்லின் ஈரப்பதம் குறித்து கலெக்டர் தீபக் ஜேக்கப் ஆய்வு மேற்கொண்டார்.
ஈச்சங்கோட்டையில், கொள்முதல் நெல்லின் ஈரப்பதம் அளவிடும் பணியை கலெக்டர் ஆய்வு
- சேமிப்பு கிடங்கில் உள்ள நெல் மூட்டைகள் குறித்து ஆய்வு செய்தார்.
- அம்மன்பேட்டையில் உள்ள நவீன அரிசி ஆலையில் ஆய்வு செய்தார்.
தஞ்சாவூர்:
தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலையில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் கீழ் செயல்படும் உழவர் சந்தையில் கலெக்டர் தீபக் ஜேக்கப் ஆய்வு செய்தார்.
அப்போது அவர், காய்கறிகள் வரத்து, விலை நிர்ணயம் குறித்து கேட்டறிந்ததுடன் உழவர் சந்தை காய்கறி கழிவுகளை உரமாக்கும் எந்திரத்தின் செயல்பாட்டை யும் பார்வையிட்டார்.
மேலும் அவர், உழவர் சந்தையில் உள்ள விவசாயிகள், மகளிர் சுயஉதவிக்குழு கடைகளுக்கு சென்று விற்பனை நிலவரத்தை கேட்டறிந்தார்.
தொடர்ந்து அவர், வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில் செயல்படும் மாநில அக்மார்க் ஆய்வகத்தின் செயல்பாடு குறித்தும், சேமிப்பு கிடங்கில் உள்ள நெல் மூட்டைகள் குறித்தும் ஆய்வு செய்தார்.
பின்னர் ஒரத்தநாடு ஒன்றியம் ஈச்சங்கோட்டை யில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு சென்ற கலெக்டர் தீபக் ஜேக்கப், விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் நெல்லின் ஈரப்பதம் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
இதையடுத்து அவர், ஈச்சங்கோட்டையில் உள்ள நாற்றாங்கால் பண்ணை, திருவையாறு ஒன்றியம் அம்மன்பேட்டையில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக நவீன அரிசி ஆலை ஆகியவற்றிலும் ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக முதுநிலை மண்டல மேலாளர் உமாமகேஸ்வரி, வேளாண்மை இணை இயக்குனர் நல்லமுத்துராஜா, வேளாண்மை துணை இயக்குனர் வித்யா, உதவி பொறியாளர் கலைமாமணி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.






