search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பேளூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில்  ஊட்டச்சத்து விழிப்புணர்வு கண்காட்சி
    X

    ஊட்டச்சத்து கண்காட்சியை பார்வையிட்ட கர்ப்பிணிப் பெண்கள்.

    பேளூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஊட்டச்சத்து விழிப்புணர்வு கண்காட்சி

    • அரசு வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தில் அங்கன்வாடி பணியாளர்களின் ஊட்டச்சத்து விழிப்புணர்வு கண்காட்சி நடைபெற்றது.
    • கிராம சுகாதார செவிலியர்கள் மற்றும் கர்ப்பிணி தாய்மார்கள் கலந்து கொண்டு கண்காட்சியை பார்வையிட்டு பயன் பெற்றனர்.

    வாழப்பாடி:

    பேளூர் அரசு வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தில் அங்கன்வாடி பணியாளர்களின் ஊட்டச்சத்து விழிப்புணர்வு கண்காட்சி நடைபெற்றது. வட்டார மருத்துவ அலுவலர் பொன்னம்பலம் தலைமை வகித்தார். வட்டார ஊட்டச்சத்து திட்ட மேற்பாற்வையாளர்கள் பத்மாவதி, பத்மா, திட்ட ஒருங்கிணைப்பாளர் கீர்த்திகாதேவி ஆகியோர், ஊட்டச்சத்து கண்காட்சிக்கான ஏற்பாடுகளை செய்து முன்னிலை வகித்தனர்.

    டாக்டர் கார்த்திகா, சமுதாய சுகாதார செவிலியர் ராணி, மணிமாலா ஆகியோர் ஊட்டச்சத்து முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு கருத்துரை வழங்கினர்.

    கிராம சுகாதார செவிலியர்கள் மற்றும் கர்ப்பிணி தாய்மார்கள் கலந்து கொண்டு கண்காட்சியை பார்வையிட்டு பயன் பெற்றனர்.

    அங்கன்வாடி பணியாளர்களின் ஊட்டச்சத்து கண்காட்சி, கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு பயனுள்ள வகையில் அமைந்ததாக தெரிவித்தனர். முடிவில், வட்டார சுகாதார மேற்பாற்வையாளர் சீனிவாசன் நன்றி கூறினார்.

    Next Story
    ×