என் மலர்
அரியலூர்
திருமானூர்:
காவிரியில் தண்ணீர்திறந்து விடக்கோரி அரியலூர் மாவட்டம் திருமானூர் பஸ் நிலையம் அருகே திருமானூர் ஒன்றிய அனைத்து விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் திருமானூர் விவசாய சங்க தலைவர் மணியன், வைத்தியலிங்கம், வரப்பிரசாதம், தங்க மலை,சி.பி.ஐ. கட்சி ஒன்றிய செயலாளர் ஆறுமுகம், பரிசுத்தம், கலியபெருமாள், சி.பி.எம். கட்சி ஒன்றிய செயலாளர் புனிதன், மாவட்டக் குழு உறுப்பினர் சவரிராஜன், ஆதித்தநாதன், சுப்பிரமணியன், ஏசுதாஸ்,
தி.மு.க. மாவட்ட செயலாளர் சிவசங்கர், துணை செயலாளர் தனபால், ஒன்றிய செயலாளர் கென்னடி, முருகேசன், ஜோதி வேல், இந்திய தேசிய காங்கிரஸ் கிழக்கு மாவட்ட தலைவர் சீமான், மேற்கு மாவட்ட தலைவர் பாண்டியன், மாவட்ட பொதுச்செயலாளர் தேவர், கீழப்பழுர் செல்வகுமார்,
தமிழ் மாநில காங்கிரஸ் மாவட்ட தலைவர் எஸ்.ஆர். எம்.குமார், மாவட்ட பொது செயலாளர் பழனிச்சாமி, விவசாய சங்க தலைவர் கைலாசம், உத்திராபதி, மேற்கு மாவட்ட தலைவர் செல்வம், விவசாய சங்க மாவட்ட தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதைபார்த்த அமுதாவின் உறவினர் தேன்மொழி மற்றும் அமுதாவின் மாமியார் ஆகியோர் தட்டி கேட்டுள்ளனர். இதில் ஆத்திரமடைந்த சிவக்குமார், அமுதா, தேன்மொழி ஆகிய 2 பேரையும் கட்டையால் தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த 2 பேரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக அமுதா, தேன்மொழி ஆகிய 2 பேரையும் கும்பகோணம் தனியார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் ஆண்டிடம் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் வழக்குப்பதிவு செய்து சிவக்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் நேற்று அதிகாலை அப்பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் டீ குடிப்பதற்காக கடைத்தெருவிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது செல்லியம்மன் கோவில் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து அவர் கோவிலின் அறங்காவலர் மணிவண்ணனுக்கு தகவல் தெரிவித்தார். மணிவண்ணன் உள்பட கோவில் நிர்வாகிகள் வந்து பார்த்தபோது, கோவிலில் இருந்த பொருட்கள் ஆங்காங்கே சிதறி கிடந்தன. மேலும் கோவிலின் தனி அறையில் வைக்கப்பட்டிருந்த 2 சில்வர் உண்டியல்கள் காணாமல் போயிருந்தது தெரியவந்தது.
இது குறித்து மீன்சுருட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமலிங்கம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் குண்டவெளி கிராம முந்திரி தோப்பில் 2 உண்டியல்கள் உடைக்கப்பட்ட நிலையில் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்று பார்த்தபோது, அந்த உண்டியல்கள் கோவிலில் திருடப்பட்டவை என்பதும், அதிலிருந்த ரூ.10 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு மர்ம நபர்கள் தப்பி சென்றதும் தெரியவந்தது.
மீன்சுருட்டி பகுதியில் கடந்த சில மாதங்களாக இதுபோன்று கோவில் உண்டியல் பணம் திருட்டு போகும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. இதனால் பொதுமக்கள் பீதியடைந்து வருகின்றனர். உண்டியல் திருட்டு சம்பவங்களில் ஈடுபடும் நபர்கள் வடமாநிலத்தவரா? அல்லது உள்ளூர் ஆட்களா? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே, செல்லியம்மன் கோவில் உண்டியல் பணம் திருட்டு போனது குறித்து அறங்காவலர் மணிவண்ணன், மீன்சுருட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு, செய்து உண்டியல் பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
செந்துறை:
திண்டுக்கல் அருகே பங்ளாகுட்டு அடிவாரத்தில் வசித்து வருபவர் சேகர்(வயது41) டிராக்டர் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். நேற்று இவர் தண்ணீர் டேங்கர் டிராக்டரை இவரது வீட்டிலிருந்து செந்துறை குரும்பபட்டி சாலைக்கு செல்லும் வழியில் மண்மேடு பகுதியில் நிலைதடுமாறி தண்ணீர் டேங்கர் சாய்ந்தது. இதனால் முன்பகுதியில் உள்ள டிராக்டரும் சாய்ந்ததில் பேட்டரி வயர் திடீரென்று தீப்பற்றியது.
டீசலும் கொட்டியதில் சேகர் அந்த டிராக்டரில் மாட்டிக்கொண்டு அவர் மீதும் தீபற்றியதில் அவர் உடல் தீயில் கருகி சம்பவ இடத்திலேயே பலியானார்.
இது குறித்து நத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சேகரின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகப் பிரதான கூட்டரங்கில், விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் சரவண வேல்ராஜ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது:-
அரியலூர் மாவட்டத்தின் ஆண்டு சராசரி மழையளவு 954 மி.மீ ஆகும். நடப்பு ஆண்டில் இம்மாதம் இது நாள் வரை 237.55 மி.மீ. மழை பெறப்பட்டுள்ளது. வேளாண்மை மற்றும் தோட்டக்கலை பயிர்களுக்கு தேவையான 1352 மெ.டன் யூரியா, 768 மெ.டன் டி.ஏ.பி, 445 மெ.டன் பொட்டாஷ் மற்றும் 1130 மெ.டன் காம்ப்ளக்ஸ் உரங்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் உர விற்பனை மையங்களில் இருப்பில் உள்ளது.
இதுவரை சான்று பெற்ற நெல் விதைகள் வேளாண்மை விரிவாக்க மையம் மூலம் 25 மெ.டன், தனியார் விதை விற்பனை மையங்கள் மூலம் 10 மெ.டன் என கூடுதலாக 35 மெ.டன் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. தற்போது வேளாண்மை விரிவாக்க மையங்களில் 270 மெ.டன், கூட்டுறவுத் துறையில் 45 மெ.டன் மற்றும் தனியார் கடைகளில் 15 மெ.டன் ஆக மொத்தம் 330 மெ.டன் நெல் விதைகள் கையிருப்பில் உள்ளது.
சம்பா சாகுபடி தொகுப்புத் திட்டத்தின் மூலம் தமிழக முதலமைச்சர் சம்பா தொகுப்பு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் விவசாயிகள் நெல் விதைப்பு மேற்கொள்வதற்காக தரிசு உழவுப் பணிக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.500 வழங்கப்படும். விவசாயிகள் தரமான சான்று பெற்ற நெல் விதைகள் பெற ஏதுவாக விதைகளுக்கு கிலோ ஒன்றுக்கு ரூ.10 மானியம் வழங்கப்படும்.
விதைப்பு கருவிக் கொண்டு இயந்திர முறையில் நெல் விதைப்பு மேற்கொள்ள ஏக்கர் ஒன்றுக்கு ரூ.600 மானியம் வழங்கப்படும். நேரடி நெல் விதைப்பு மேற்கொள்ளப்படும் இடங்களில், களை பாதிப்பு அதிகளவு இருக்கும் என்பதால் களைக்கொல்லி மருந்து தெளிக்க, ஏக்கர் ஒன்றுக்கு ரூ.280 மானியம் வழங்கப்படும்.
மேலும் நடவு இயந்திரம் மூலம், நெல் நடவு மேற்கொள்ள ஏக்கர் ஒன்றுக்கு ரூ.2000 மானியம் வழங்கப்படும். தொடர்ச்சியாக நெல் சாகுபடி செய்வதால் துத்தநாக சத்து குறைபாடு ஏற்படும். இத்தகைய குறைபாடு உள்ள வயல்களில் துத்தநாக சல்பேட் பயன்படுத்த ஏக்கருக்கு ரூ.200 மானியம் வழங்கப்படும். இந்த மானியங்கள் அனைத்தும் பின்னேற்பு மானியமாக விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.
எனவே வேளாண்மைத் துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களில் விவசாயிகள் பயன்பெற தங்களது பகுதி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்களை தொடர்பு கொள்ளுமாறு மாவட்ட கலெக்டர் சரவண வேல்ராஜ் தெரிவித்துள்ளார்.
முன்னதாக வேளாண்மை மற்றும் தோட்டக் கலைத்துறையின் சார்பில் திட்ட விளக்க கையேட்டினை மாவட்ட கலெக்டர் சரவண வேல்ராஜ் வெளியிட விவசாய பிரதிநிதிகள் பெற்றுக்கொண்டனர். இந்நிகழ்ச்சியில், வேளாண்மை இணை இயக்குநர் சதானந்தம், துணை இயக்குநர் (தோட்டக்கலைத்துறை) அன்பு ராஜன், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) சரவணன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் வட்டம், ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றியம், சிலுவைச்சேரி ஊராட்சியில் தமிழ்நாடு வனத்தோட்டக்கழக பண்ணை உள்ளது. இந்த பண்ணையில் பசுமை குடில் மூலம் உற்பத்தி செய்யப்படும் நாற்றங்கால் பண்ணையினையும், சின்னவளையம் ஊராட்சியில் அமைக்கப்பட்டுள்ள முந்திரி பதப்படுத்தும் தொழிற்சாலையினையும் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், தமிழக அரசு தலைமை கொறடா தாமரை.எஸ்.ராஜேந்திரன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இவ்வாய்வின் போது வனத்துறை அமைச்சர் சீனிவாசன் தெரிவித்தாவது:-
ஆண்டிமடம் ஒன்றியம், சிலுவைச்சேரி மத்திய நாற்றங்கால் தமிழ்நாடு வனத்தோட்டக்கழகத்தின் மூலம் அமைக்கப்பட்டுள்ள நாற்றங்கால் பண்ணை விவசாயிகள் முந்திரி உற்பத்தி விரிவுப்படுத்தும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ளது.
இப்பண்ணையில் 2016-2017-ஆண்டுக்கான நாற்றங்கல் உற்பத்தி செய்வதற்கான இலக்கு நிர்ணயிக்கப்பட்டு ஒரு லட்சம் குளோனிங் தையல கன்றுகளும், 75 ஆயிரம் வி.ஆர்.ஐ3 (விருத்தாசலம் 3) ரக முந்திரி நாற்றுகளும் உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு நடவுப்பணிக்கு தயாராக உள்ளது. இவ்வனச்சாராகத்திற் குட்பட்ட பண்ணையில் குளோனிங் தையல கன்றுகள் மற்றும் முந்தி ஒட்டு கன்றுகள் உற்பத்தி செய்யும் வழிமுறைகளை செய்து காண்பிக்கப்பட்டது.
ஜெயங்கொண்டம் ஒன்றியம், சின்னவளையத்தில் உள்ள வனச்சராக அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள முந்திரி சுத்தம் செய்து பதப்படுத்தும் தொழிற்சாலை ரூ.23 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளது. வனச்சாரக கட்டுப்பட்டில் உள்ள நிலங்களில் முந்திரி கன்றுகள் பயிரிடப்பட்டு 3 வருடங்களாக பராமரிக்கப்பட்டு வருகிறது என அவர் தெரிவித்தார்.
இவ்வாய்வின்போது, ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் ராமஜெயலிங்கம், தமிழ்நாடு வனத்தோட்டக்கழகம் முதன்மை தலைமை வன பாதுகாவலர் மற்றும் தலைவர் லெட்சுமிநாராயணன், இணை நிர்வாக இயக்குநர் வெங்கடாசலம், பொது மேலாளர் ஆசிஸ்குமார் ஸ்ரீவஸ்தவா, துணை வன பாதுகாவலர் நீதிராஜன், அரியலூர் மாவட்ட வன அலுவலர் சந்திரன், கோட்டாட்சியர் டினாகுமாரி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) சரவணன், வட்டாட்சியர் திருமாறன் மற்றும் வனத்துறை அலுவலர்களும் கலந்துக் கொண்டனர்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ராமஜெயலிங்கம் சட்டசபையில் தொகுதி மக்களின் பிரச்சனைகள் குறித்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிறார்.
கடந்த 19-ந்தேதி தேதி நடைபெற்ற சட்டமன்ற கூட்டத் தொடரில் ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ. ராமஜெயலிங்கம் தனது துணை வினாவின் போது முதல்வரிடம் தனது கோரிக்கையை முன்வைத்து பேசியதாவது:-
மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, தேர்தல் பிரசாரத்தின் போது புரட்சித் தலைவி அம்மா, நமக்கு நாமே என்றில்லாமல், நமக்கு மக்கள்தான் முக்கியம் என்று கோரிக்கை வைத்து, அதற்கு மக்களும் ‘குடும்ப ஆட்சி வராமல் முடியட்டும், தமிழகம் அம்மா தலைமையில் விடியட்டும்’ என்று தீர்ப்பளித்து தமிழகத்தில் 6-வது முறையாக முதலமைச்சராகப் பதவியேற்றுள்ளார்.
இதற்காக முதல்வரின் மலர்ப்பாதங்களை வணங்கி, ஜெயங்கொண்டம் நகரம் மிகவும் பழமைவாய்ந்த நகரம், அரியலூர் மாவட்டத்திலே ராஜேந்திர சோழனால் உருவாக்கப்பட்ட நகரம், இங்கு நான்கு புறங்களிலும் பெரிய நகரங்கள் இருக்கின்ற காரணத்தினால் ஜெயங்கொண்டம் நகரத்திற்கு புறவழிச்சாலை அமைக்கப்படுமா என்பதை பேரவைத் தலைவர் வாயிலாக அமைச்சரிடம் கேட்டு அமர்கிறேன்.
இதைத்தொடர்ந்து அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதில் அளித்து பேசுகையில், ஜெயங்கொண்டத்திற்கு புறவழிச்சாலை அமைக்க வேண்டுமென்று இங்கே உறுப்பினர் கோரிக்கை வைத்திருக்கின்றார்.
ஜெயங்கொண்டம் நகராட்சியிலே அந்தப் பகுதியிலே செல்லுகின்ற வாகனங்களுடைய எண்ணிக்கையை ஆய்வு செய்து, அந்த ஆய்விலே உறுப்பினர் சொல்வதைப் போல அதிகமான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்ற பட்சத்தில் நடப்பாண்டில் நிதிநிலைமைகளுக்கேற்ப அரசு ஆவன செய்யும் என்பதை பேரவைத் தலைவர் வாயிலாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஜெயங்கொண்டம் தொகுதி மக்களின் வளர்ச்சிக்காக தொடர்ந்து சட்டசபையில் குரல் கொடுத்து தொகுதியின் வளர்ச்சிக்காக பாடுபட்டு வரும் எம்.எல்.ஏ. ராமஜெயலிங்கத்தை மக்கள் பெரிதும் பாராட்டி பேசுவது மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 26.8.2016 வெள்ளிக்கிழமை அன்று காலை 10.00 மணிக்கு மாவட்ட ஆட்சியரக அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
கூட்டத்தில் விவசாயிகள், முன்னோடி விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் தங்கள் விவசாயம் சார்ந்த குறைகளை தெரிவிக்கலாம் என மாவட்ட கலெக்டர் எ.சரவணவேல்ராஜ் தெரிவித்துள்ளார்.
ஜெயங்கொண்டம்:
ஜெயங்கொண்டம் அருகேயுள்ள தேவனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிமுத்து (வயது 30). இவர் ஸ்ரீரங்கத்தில் 108 ஆம்புலன்ஸ் டிரைவராக பணிபுரிந்து வருகிறார்.
கடந்த 19-ம் தேதி இரவு 10 மணியளவில் வீட்டில் இருந்தபோது மழை வருவதுபோல் மேகமூட்டமாக இருந்ததால் தனது மோட்டார் சைக்கிள் நனைந்துவிடாமல் இருக்க வீட்டினுள் நிறுத்துவதற்காக தள்ளிய போது பழனி முத்துவின் தம்பி இளவழகன் வண்டியை உள்ளே நிறுத்தக்கூடாது என கூறி திட்டியுள்ளதாக தெரிகிறது. உடன் பழனி முத்து உன்வண்டி மட்டும் நிக்கலாமா என கேட்டுள்ளார். அதற்கு இளவழகன் நான் எங்குவேண்டுமானாலும் நிறுத்துவேன் எனக்கூறி பழனிமுத்துவை பீர்பாட்டிலால் குத்திவிட்டார்,
காயமடைந்த அவர் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து ஜெயங்கொண்டம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை திருவள்ளூர் மாவட்டம் வெங்கட்டாபுரத்தை சேர்ந்தவர் சுமன் (வயது 33). இவர் பக்ரைன் நாட்டில் ஒரு தனியார் நிறுவனத்தில் கம்யூட்டர் என்ஜினீயராக பணிபுரிந்து வந்தார். இவருக்கும், அதே நிறுவனத்தில் பணிபுரியும் பிந்து என்ற பெண்ணுக்கும் கடந்த 10 நாட்களுக்கு முன்பு தான் திருமணம் நடந்தது.
இந்நிலையில் கும்பகோணம் அருகேயுள்ள சனீஸ்வரன் கோவிலில் சாமி கும்பிடுவதற்காக சுமன் தனது மனைவி பிந்து மற்றும் தாய், தந்தையுடன் காரில் சென்று கொண்டிருந்தார். காரை சுமன் ஒட்டி சென்றார். அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகேயுள்ள தென்னவநல்லூர் கிராமம் அருகே வந்த போது எதிர்பாராதவிதமாக கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி நிழற்குடையில் மோதியது. இதில் நிழற்குடை இடிந்து காரின் மீது விழுந்தது.
இந்த விபத்தில் காரில் இருந்த 4 பேரும் இடிபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்தனர். இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து, படுகாயம் அடைந்த 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சுமன் பரிதாபமாக உயிரிழந்தார். சுமனின் மனைவி, தாய், தந்தை ஆகியோர் மேல்சிகிச்சைக்காக திருச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இச்சம்பவம் குறித்து மீன்சுருட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான 10 நாளில் கம்யூட்டர் என்ஜினீயர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது.
ஜெயங்கொண்டம் :
ஜெயங்கொண்டம் ஒன்றிய அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சிறப்பு காலமுறை ஊதியத்தை மாற்றி காலமுறை ஊதியத்தை வழங்கவேண்டும், ஓய்வூதியம் ரூ.3500 வழங்கவேண்டும், பணிக்கொடை ரூ.3 லட்சமாக உயர்த்தி வழங்கவேண்டும், உணவு, செலவு மானியத்தை உயர்த்தி வழங்க வேண்டும், உதவியாளர்களுக்கு சமையலர் பதவி உயர்வும், சமைய லர்களுக்கு அமைப்பாளர் பதவியும் வழங்கவேண்டும், காலிப்பணியிடங்களை போர்கால அடிப்படையில் உடன் நிரப்பிட வேண்டும், உள்ளிட்ட 25 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஷாஜகான் தலைமை வகித்தார். ஒன்றிய தலைவர் சிற்றரசு முன்னிலை வகித்தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில பொதுக்குழு உறுப்பினர் வேல்முருகன், ஒன்றிய நிர்வாகிகள் செல்லதுரை, ராமசாமி, ஜெயக்ெ காடி, ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.
முன்னதாக ஒன்றிய செயலாளர் குமாரசாமி வரவேற்றார். முடிவில் பொதுக்குழு உறுபபினர் ஜானகி நன்றி கூறினார்.
ஜெயங்கொண்டம்:
கடலூர் மாவட்டம், திட்டக்குடி அருகேயுள்ள தொழார் காலனி தெருவைச் சேர்ந்தவர் பெரியசாமி மகள் சாந்தி (வயது 37). இவருக்கும் அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகேயுள்ள கடம்பூர் கிராமத்தைச் சேர்ந்த சதாசிவம் மகன் அருள்மணி (37) என்பவருக்கும் கடந்த 2001-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.
இந்த நிலையில் அருள்மணி சாந்தியிடம் தந்தை வீட்டிற்கு சென்று கை செயின், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை வாங்கிவருமாரு அடித்து வீட்டை விட்டு விரட்டி விட்டதாக கூறப்படுகிறது.
இதனால் சாந்தி தனது தந்தை வீட்டில் வசித்து வந்துள்ளார். கடந்த 2005-ம் ஆண்டு கணவர் அருள்மணி அதே ஊரைச்சேர்ந்த சுஜாதா (25) என்பவரை 2-வது திருமணம் செய்துகொண்டதாக தகவல் கிடைத்துள்ளது.
இதனால் கடம்பூர் சென்ற சாந்தி தனது சீர்வரிசையை திருப்பி கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மாமனார் சதாசிவம், மாமியார் அலமேலு, கொழுந்தனார்கள் ராமர், லெட்சுமணன், நாத்தனார்கள் நிர்மலா, வெண்ணிலா, 2வது மனைவி சுஜாதா உட்பட 10 பேரும் ஆபாசமாக திட்டி கொலை மிரட்டில் விடுத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து சாந்தி ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் வேலுச்சாமி (பொறுப்பு) வழக்கு பதிவு செய்து அருள்மணியை கைது செய்தனர். மேலும் 9 பேரை தேடி வருகின்றனர்.






