என் மலர்
செய்திகள்

அரியலூர் மாவட்டத்தில் வனத்தோட்டக்கழக பண்ணையில் அமைச்சர் சீனிவாசன் ஆய்வு
அரியலூர்:
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் வட்டம், ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றியம், சிலுவைச்சேரி ஊராட்சியில் தமிழ்நாடு வனத்தோட்டக்கழக பண்ணை உள்ளது. இந்த பண்ணையில் பசுமை குடில் மூலம் உற்பத்தி செய்யப்படும் நாற்றங்கால் பண்ணையினையும், சின்னவளையம் ஊராட்சியில் அமைக்கப்பட்டுள்ள முந்திரி பதப்படுத்தும் தொழிற்சாலையினையும் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், தமிழக அரசு தலைமை கொறடா தாமரை.எஸ்.ராஜேந்திரன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இவ்வாய்வின் போது வனத்துறை அமைச்சர் சீனிவாசன் தெரிவித்தாவது:-
ஆண்டிமடம் ஒன்றியம், சிலுவைச்சேரி மத்திய நாற்றங்கால் தமிழ்நாடு வனத்தோட்டக்கழகத்தின் மூலம் அமைக்கப்பட்டுள்ள நாற்றங்கால் பண்ணை விவசாயிகள் முந்திரி உற்பத்தி விரிவுப்படுத்தும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ளது.
இப்பண்ணையில் 2016-2017-ஆண்டுக்கான நாற்றங்கல் உற்பத்தி செய்வதற்கான இலக்கு நிர்ணயிக்கப்பட்டு ஒரு லட்சம் குளோனிங் தையல கன்றுகளும், 75 ஆயிரம் வி.ஆர்.ஐ3 (விருத்தாசலம் 3) ரக முந்திரி நாற்றுகளும் உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு நடவுப்பணிக்கு தயாராக உள்ளது. இவ்வனச்சாராகத்திற் குட்பட்ட பண்ணையில் குளோனிங் தையல கன்றுகள் மற்றும் முந்தி ஒட்டு கன்றுகள் உற்பத்தி செய்யும் வழிமுறைகளை செய்து காண்பிக்கப்பட்டது.
ஜெயங்கொண்டம் ஒன்றியம், சின்னவளையத்தில் உள்ள வனச்சராக அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள முந்திரி சுத்தம் செய்து பதப்படுத்தும் தொழிற்சாலை ரூ.23 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளது. வனச்சாரக கட்டுப்பட்டில் உள்ள நிலங்களில் முந்திரி கன்றுகள் பயிரிடப்பட்டு 3 வருடங்களாக பராமரிக்கப்பட்டு வருகிறது என அவர் தெரிவித்தார்.
இவ்வாய்வின்போது, ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் ராமஜெயலிங்கம், தமிழ்நாடு வனத்தோட்டக்கழகம் முதன்மை தலைமை வன பாதுகாவலர் மற்றும் தலைவர் லெட்சுமிநாராயணன், இணை நிர்வாக இயக்குநர் வெங்கடாசலம், பொது மேலாளர் ஆசிஸ்குமார் ஸ்ரீவஸ்தவா, துணை வன பாதுகாவலர் நீதிராஜன், அரியலூர் மாவட்ட வன அலுவலர் சந்திரன், கோட்டாட்சியர் டினாகுமாரி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) சரவணன், வட்டாட்சியர் திருமாறன் மற்றும் வனத்துறை அலுவலர்களும் கலந்துக் கொண்டனர்.






