என் மலர்
செய்திகள்

திண்டுக்கல் அருகே விபத்து: டிராக்டருடன் உயிரோடு எரிந்த பலியான டிரைவர்
திண்டுக்கல் அருகே டிராக்டரில் தீ பிடித்ததால் டிரைவர் உயிரோடு எரிந்து பலியானார்.
செந்துறை:
திண்டுக்கல் அருகே பங்ளாகுட்டு அடிவாரத்தில் வசித்து வருபவர் சேகர்(வயது41) டிராக்டர் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். நேற்று இவர் தண்ணீர் டேங்கர் டிராக்டரை இவரது வீட்டிலிருந்து செந்துறை குரும்பபட்டி சாலைக்கு செல்லும் வழியில் மண்மேடு பகுதியில் நிலைதடுமாறி தண்ணீர் டேங்கர் சாய்ந்தது. இதனால் முன்பகுதியில் உள்ள டிராக்டரும் சாய்ந்ததில் பேட்டரி வயர் திடீரென்று தீப்பற்றியது.
டீசலும் கொட்டியதில் சேகர் அந்த டிராக்டரில் மாட்டிக்கொண்டு அவர் மீதும் தீபற்றியதில் அவர் உடல் தீயில் கருகி சம்பவ இடத்திலேயே பலியானார்.
இது குறித்து நத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சேகரின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story






