என் மலர்
செய்திகள்

ஜெயங்கொண்டம் அருகே 2-வது திருமணம் செய்த கணவரை தட்டி கேட்ட இளம் பெண்ணுக்கு கொலை மிரட்டல்
ஜெயங்கொண்டம்:
கடலூர் மாவட்டம், திட்டக்குடி அருகேயுள்ள தொழார் காலனி தெருவைச் சேர்ந்தவர் பெரியசாமி மகள் சாந்தி (வயது 37). இவருக்கும் அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகேயுள்ள கடம்பூர் கிராமத்தைச் சேர்ந்த சதாசிவம் மகன் அருள்மணி (37) என்பவருக்கும் கடந்த 2001-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.
இந்த நிலையில் அருள்மணி சாந்தியிடம் தந்தை வீட்டிற்கு சென்று கை செயின், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை வாங்கிவருமாரு அடித்து வீட்டை விட்டு விரட்டி விட்டதாக கூறப்படுகிறது.
இதனால் சாந்தி தனது தந்தை வீட்டில் வசித்து வந்துள்ளார். கடந்த 2005-ம் ஆண்டு கணவர் அருள்மணி அதே ஊரைச்சேர்ந்த சுஜாதா (25) என்பவரை 2-வது திருமணம் செய்துகொண்டதாக தகவல் கிடைத்துள்ளது.
இதனால் கடம்பூர் சென்ற சாந்தி தனது சீர்வரிசையை திருப்பி கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மாமனார் சதாசிவம், மாமியார் அலமேலு, கொழுந்தனார்கள் ராமர், லெட்சுமணன், நாத்தனார்கள் நிர்மலா, வெண்ணிலா, 2வது மனைவி சுஜாதா உட்பட 10 பேரும் ஆபாசமாக திட்டி கொலை மிரட்டில் விடுத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து சாந்தி ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் வேலுச்சாமி (பொறுப்பு) வழக்கு பதிவு செய்து அருள்மணியை கைது செய்தனர். மேலும் 9 பேரை தேடி வருகின்றனர்.






