என் மலர்
செய்திகள்

ஜெயங்கொண்டத்தில் சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
ஜெயங்கொண்டம் :
ஜெயங்கொண்டம் ஒன்றிய அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சிறப்பு காலமுறை ஊதியத்தை மாற்றி காலமுறை ஊதியத்தை வழங்கவேண்டும், ஓய்வூதியம் ரூ.3500 வழங்கவேண்டும், பணிக்கொடை ரூ.3 லட்சமாக உயர்த்தி வழங்கவேண்டும், உணவு, செலவு மானியத்தை உயர்த்தி வழங்க வேண்டும், உதவியாளர்களுக்கு சமையலர் பதவி உயர்வும், சமைய லர்களுக்கு அமைப்பாளர் பதவியும் வழங்கவேண்டும், காலிப்பணியிடங்களை போர்கால அடிப்படையில் உடன் நிரப்பிட வேண்டும், உள்ளிட்ட 25 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஷாஜகான் தலைமை வகித்தார். ஒன்றிய தலைவர் சிற்றரசு முன்னிலை வகித்தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில பொதுக்குழு உறுப்பினர் வேல்முருகன், ஒன்றிய நிர்வாகிகள் செல்லதுரை, ராமசாமி, ஜெயக்ெ காடி, ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.
முன்னதாக ஒன்றிய செயலாளர் குமாரசாமி வரவேற்றார். முடிவில் பொதுக்குழு உறுபபினர் ஜானகி நன்றி கூறினார்.






