என் மலர்
அரியலூர்
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள சோழமாதேவி பகுதியைச் சேர்ந்தவர் சிற்றரசு (வயது 40) வெளிநாட்டில் வேலை செய்து வந்த இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நாடு திரும்பினார்.
பின்னர் அதே பகுதியில் உள்ள அவருக்கு சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்து வந்தார். இந்த நிலையில் போதிய தண்ணீர் இன்றி பயிர்கள் காயத்தொடங்கியது. இதனைப் பார்த்து சிற்றரசு மனமுடைந்து காணப்பட்டார்.
இந்த நிலையில் சிற்றரசு அனைக்குட்டம் பகுதியில் உள்ள மரத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
இதனை பார்த்த அக்கம், பக்கத்தினர் தா.பழூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த போலீசார் சிற்றரசுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செந்துறை:
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே சிறுகடம்பூர் கிராமத்தில் பச்சையம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் அதே பகுதியை சேர்ந்த கலியபெருமாள் என்பவர் பூசாரியாக உள்ளார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கலியபெருமாள் கோவிலில் பூஜையை முடித்து விட்டு வீட்டிற்கு சென்றார். பின்னர் நேற்று அதிகாலை அவர் கோவிலில் பூஜை செய்ய வந்தபோது கோவில் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த வெண்கலத்தால் ஆன 3 அடி உயர பச்சையம்மன் சாமி சிலையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றிருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து கலியபெருமாள் இரும்புலிக்குறிச்சி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள சிறுகடம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் இறந்து விட்டார். இவரது மகள் நந்தினி (வயது 17), கட்டிட சித்தாள் வேலைக்கு சென்று வந்தார்.
இவருக்கும் கீழமாளிகை கிராமத்தை சேர்ந்த இந்து முன்னணி ஒன்றிய செயலாளர் மணிகண்டன் (வயது 26) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது, இருவரும் செல்போனில் பேசி பழகி உள்ளனர். நாளடைவில் நெருக்கமாகவும் இருந்துள்ளனர்.
இந்த நிலையில் கடந்த டிசம்பர் 26-ந்தேதி நந்தினி திடீரென மாயமானார். அவரது தாயார் ராஜகிளி நந்தினியை பல இடங்களில் தேடினார். ஆனாலும் கிடைக்கவில்லை. மேலும் மணிகண்டன் மீது சந்தேகம் இருப்பதாகவும் அவர் போலீசில் புகார் அளித்தார்.
இதற்கிடையே கீழமாளிகை கிராமத்தில் அழகு துரைக்கு சொந்தமான பாழும் கிணற்றில் நந்தினி நிர்வாண நிலையில் பிணமாக மிதந்தார்.
நந்தினியின் உடலை அரியலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
அப்போது நந்தினி கற்பழித்து கொலை செய்யப்பட்டு இருப்பது தெரிய வந்தது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
இதை தொடர்ந்து இந்து முன்னணி பிரமுகர் மணிகண்டனை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது மணிகண்டன் நந்தினியை சம்பவத்தன்று அழைத்து வந்து வீட்டில் அடைத்து கற்பழித்து கொலை செய்ததாகவும், இதற்கு தனது நண்பர்கள் உதவியதாகவும் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து மணிகண்டனை போலீசார் கைது செய்தனர்.
நந்தினி கொலை வழக்கில் தங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று அவரது குடும்பத்தினரும், அவர்களுக்கு ஆதரவாக விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் போராட்டங்கள் நடத்தி வருகின்றன.
இந்தநிலையில் கைதான இந்து முன்னணி பிரமுகர் மணிகண்டனை குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்ய அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அனில்குமார் கிரி பரிந்துரையின்பேரில் கலெக்டர் சரவணவேல்ராஜ் உத்தரவிட்டார். இதையடுத்து மணிகண்டன் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
தா.பழுர்:
அரியலூர் மாவட்டம் தா.பழுர் அருகே உள்ள காரைகுறிச்சி கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த கிராமம் அருகில் மணல் குவாரி உள்ளது. இங்கிருந்து சென்னை உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்கு ஊர் அருகே உள்ள சாலை மூலம் மணல் லாரிகள் செல்வதால் விபத்துக்கள் ஏற்படுகிறது. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி காரைகுறிச்சி கிராம பொதுமக்கள் 25 பேருக்கு மேற்பட்டோர் தா.பழுர்- கும்பகோணம் மெயின் ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த தா.பழுர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி இதுகுறித்து உரிய அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதையடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர். இதனால் அப்பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
உடையார்பாளையம்:
உடையார்பாளையம் அருகே வாணத்திரையான்பட்டினம் கிராமத்தை சேர்ந்த கொளஞ்சி இவரது மனைவி அவகஷ்டின்மேரி(வயது36). இவர்களுக்கு 3மகன்கள் உள்ளனர். இதில் முதல் மகன் பிரவீன்குமார்(16).இவர் ஜெயங்கொண்டம் அருகே மகிமைப்புரம் தனியார் மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு படித்துவருகிறார்.
இந்நிலையில் பிரவீன் குமார் தாயார் பொதுத்தேர்வில் மதிபெண் குறைவாக உள்ளது நன்றாக படிக்கவேண்டும் என திட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று காலையில் பள்ளி சென்றவர் வீடு திரும்பவில்லை. மேலும் பிரவீன்குமார் தாயார் பள்ளி ஆசிரியர்களிடம் சென்று கேட்டபோது பிரவீன்குமார் பள்ளி வரவில்லை என ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
இதனையடுத்து அதிர்ச்சியடைந்த பிரவீன்குமார் தாயர் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடு என எங்தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து உடையார்பாளையம் போலீஸ் நிலையத்தில் பிரவீன்குமார் தாயார் அவகஷ்டின்மேரி புகார் கொடுத்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் பாரதிதாசன் வழக்கு பதிந்து மாயமான மாணவன் பிரவீன்குமாரை தேடிவருகிறார்.
ராஜேந்திரசோழனால் உருவாக்கப்பட்ட இக்கோவில் யுனெஸ்கோவால் உலக புராதன சின்னமாக அறிவிக்கப்பட்டு சுற்றுலா தலமாகவும் விளங்கி வருகிறது.
இந்த கோவிலில் கடந்த 1932-ம் ஆண்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டதாக சில கல்வெட்டுகளில் கூறப்பட்டுள்ளது. அதன்பிறகு தற்போது 85 ஆண்டுகளுக்கு பின் இன்று (2-ந்தேதி) கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை மற்றும் தொல்லியல்துறை அனுமதியுடன் காஞ்சி அன்னாபிஷேக கமிட்டியினர் செய்தனர்.
கும்பாபிஷேக விழாவையொட்டி இக்கோவிலில் 400 வருடங்களுக்கு பின்னர் தற்போது கடந்த 19-ந்தேதி இந்தோனேசியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட 52 அடி உயர வேங்கை மரத்திலான கொடிமரம் அமைக்கப்பட் டது. கொடிமரத்திற்கு தங்க முலாம் பூசப்பட்ட தகடு பொருத்தும் பணி நேற்று நடைபெற்றது.
தொடர்ந்து 6-ம் கால யாகசாலை பூஜை, விசேஷ சந்தி மருந்து சாத்துதல், பூர்ணாகுதி, தீபாராதனை, மாலை 5 மணிக்கு யாகசாலை பூஜை, விசேஷ சந்தி, இரவு 7 மணிக்கு பிரம்மசாரி பூஜை, கன்யா பூஜை, தம்பதிபூஜை, லட்சுமி பூஜை, இரவு 8 மணிக்கு 7-ம் கால யாசாலை பூஜை, பிம்பசுத்திரஷாபந்தனம், பூர்ணாகுதி, தீபாராதனை நடைபெற்றது.
இன்று காலை 8.30 மணிக்கு கடம் புறப்பாடு 9.30 மணிக்கு சோழீஸ்வரர் ஆலயம், பெரிய நாயகி அம்மன், துர்க்கையம்மன் உட்பட அனைத்து கோவில்களில் அமைக்கப்பட்டிருந்த கலசங்களுக்கு கங்கையிலிருந்து கொண்டுவரப்பட்ட புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
அப்போது அங்கு கடலென திரண்டிருந்த பக்தர்கள் மீது கும்பாபிஷேக புனித நீர் தெளிக்கப்பட்டது.
மாலை 4 மணிக்கு மகாபிஷேகம், 5 மணிக்கு திருக்கல்யாணம், 6 மணிக்கு சுவாமி திருவீதிஉலா ஆகியவை நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை காஞ்சி காமகோடி அன்னாபிஷேக கமிட்டியினர் செய்துள்ளனர்.
விழாவில் தமிழகம் முழுவதிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களின் வசதிக்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அனில்குமார்கிரி தலைமையில் போலீசார் சிறப்பாக செய்திருந்தனர்.
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரை அடுத்த திருப்பைஞ்ஞீலி கிராமத்தில் அமைந்துள்ளது நீலிவனேஸ்வரர் கோவில். சிவஸ்தலமான அங்கு நீலிவனேஸ்வரர் என்னும் நீலகண்டேஸ்வரரும், விசாலாட்சியும் அருள்பாலிக்கிறார்கள்.
பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் திருப்பணிகள் நடந்தது. இதையடுத்து இன்று மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. முன்னதாக கடந்த 24-ந்தேதி கிராம சாந்தி பூஜை, 25-ந்தேதி விக்னேஸ்வர பூஜை, பைரவர், கணபதி ஹோமம், அஷ்டலெட்சுமி பூஜை உள்பட பூஜைகள் நடந்தன. 26-ந்தேதி கொள்ளிடம் ஆற்றில் இருந்து பக்தர்கள் தீர்த்த குடம் எடுத்து வந்தனர்.
30-ந்தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கின. இதையடுத்து இன்று காலை 8.15 மணியளவில் விநாயகர், ஞீலிவனேஸ்வரர், விசாலாட்சி அம்பாள், நீள் நெடுங்கண் நாயகி, கஜலட்சுமி, செந்தாமரைக்கண்ணன், எமன் சன்னதி, சோற்றுடைய ஈஸ்வரர், காசி விஸ்வநாதர் ஆகிய சன்னதி விமானங்களுக்கும், வசந்த மண்டபத்தில் உள்ள விநாயகர் சன்னதி, விமானம், ராவணன் கோபுரத்திற்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து 8.45 மணிக்கு அனைத்து மூலஸ்தான மூர்த்திகளுக்கும் கும்பாபிஷேகம் நடந்தது.
விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். அவர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. பக்தர்கள் வசதிக்காக பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.
அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில், “மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்” நடைபெற்றது.
கூட்டத்தில் இலவச வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 502 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டுள்ளது. இம்மனுக்களின் மீது சம்மந்தப்பட்ட அலுவலர்கள் உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் (பொ) ரெங்கராஜன், திட்ட இயக்குநர் ஊரக வளர்ச்சி முகமை யோகேஸ்வரி, துணை ஆட்சியர் (சமூகபா துகாப்புத் திட்டம்) மங்கலம் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
அரியலூர் கல்லூரி சாலையில் ஜெ.தீபா பேரவை தலைமை அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. அலுவலகத்தை முன்னாள் எம்.எல்.ஏ. பொன்.இளவழகன் திறந்து வைத்து பேசியதாவது:-
முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, மக்களால் சகித்து கொள்ள முடியாத நிகழ்வுகள் ஆட்சியிலும், கட்சியிலும் நடைபெற்று வருகின்றன. ஒன்றரை கோடி தொண்டர்கள் உள்ள அ.தி.மு.க.வில் 2,600 பேர் மட்டுமே ஒரு நபரை பொறுப்பு பொதுச்செயலாளராக நியமித்துள்ளனர்.
சசிகலா பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டதை உண்மையான கட்சி தொண்டர்கள் யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை. 99.90 சதவீத தொண்டர்கள் ஜெ.தீபாவுக்கு ஆதரவான மனநிலையில் உள்ளனர்.
திருச்சியில் பிப்ரவரி 24-ந்தேதி ஜெ.தீபா கலந்து கொள்ளும் மாநில மாநாடு நடைபெற உள்ளது. வரும் உள்ளாட்சி தேர்தலில் ஜெ. தீபா நிறுத்தும் வேட்பாளர்கள் அனைவரும் வெற்றி பெறுவார்கள். அதன் பிறகு ஆட்சியும், கட்சியும் அவரை தேடி வரும் சூழ்நிலை உருவாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதேபோல் பெரம்பலூரில் நடந்த தீபா ஆதரவாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. இளவழகன் தலைமை தாங்கி பேசியதாவது:-
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறப்பில் மர்மம் உள்ளது. நாட்டு மக்களின் பாதுகாப்பு கேள்வி குறியாகியுள்ளது. 1.50 கோடி தொண்டர்கள் தீபா பக்கம் உள்ளனர். தீபா அ.தி.மு.க. பொதுச்செயலாளராகி முதல்வராக பதவியேற்கும் காலம் வெகு விரைவில் வரும். சசிகலாவிற்கு எதிராக 1.50கோடி அ.தி.மு.க. தொண்டர்களின் அம்பு, வருகிற தேர்தலில் வாக்குகளாக பாயும்.
சட்டரீதியாக தீபா பேரவை தொடங்கப்பட உள்ளது. அதற்கான அதிகாரபூர்வமான உறுப்பினர் படிவம் விரைவில் வழங்கப்படும். மாவட்ட, ஒன்றிய, நகர அளவில் நிர்வாகிகள் கொண்ட குழு அமைக்கப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் புரட்சி மலர் தீபா அ.தி.மு.க.விற்கு தலைமை ஏற்க வேண்டும். தீபா தலைமையில் அனைவரும் அணிவகுப்போம் என உறுதி மொழி ஏற்றனர்.
ஜெயங்கொண்டம்:
ஜெயங்கொண்டம் அடிப்பள்ளம் தெருவைச் சேர்ந்தவர் சிவானந்தம்-ராணி இருவருக்கும் திருமணமாகி மணி வண்ணன் (வயது 23), கீர்த்தனா (15) பிள்ளைகள் உள்ளனர்.
கூலி தொழிலாளியான இவர்கள் கடந்த சில வருடங்களுக்கு முன் சிவானந்தம் மற்றும் மகன், மகள் மூன்றுபேரும் திருப்பூர் சென்று தனியார் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தனர் இந்நிலையில் கடந்த மாதம் பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக ஊருக்கு வந்து பொங்கலை கொண்டாடிவிட்டு மீண்டும் திருப்பூருக்கு செல்ல புறப்பட்டனர்.
அப்பொழுது கீர்த்தனாவை தாய் ராணியின் பாதுகாப்புக்காக இருவரையும் விட்டுவிட்டு சிவானந்தம் மகன் மணிவண்ணனை அழைத்துக்கொண்டு சென்று விட்டார். இந்நிலையில் மகள் கீர்த்தனா கடந்த 24-ந்தேதி அதிகாலை 5 மணிக்கு தாயாரிடம் இயற்கை உபாதை கழிக்க செல்வதாக கூறி வெளியே சென்றவர், வெகுநேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை.
இதுகுறித்து கீர்த்தனாவின் தோழிகள் மற்றும் உறவினர்கள் வீட்டில் தேடிபார்த்தும் எங்கு கிடைக்காத நிலையில் ராணி ஜெயங்கொண்டம் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் செல்வம் வழக்கு பதிந்து காணாமல் போன கீர்த்தனாவை தேடிவருகின்றனர்.
ஜெயங்கொண்டம் சி.ஐ.டி.யு. கைத்தறி நெசவாளர் சங்கம் சார்பில் ஜெயங்கொண்டம் மத்திய கூட்டுறவு வங்கி முன்பாக நேற்று காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாவட்ட செயலாளர் துரைராஜ் தலைமை தாங்கினார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் மகாராஜன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். அக்கட்சியின் மாவட்ட செயலாளர் மணிவேல் மற்றும் சங்க மாவட்ட தலைவர் அழகுதுரை ஆகியோர் கண்டனம் தெரிவித்து பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில், நெசவாளர்களுக்கு 30 சதவீதம் கூலி உயர்வு, மாத ஊதியம் ரூ.18 ஆயிரம், நீண்ட நாட் களாக வழங்கப்படாத பயணப்படி ஆகியவற்றை உடனடியாக வழங்க வேண்டும், தமிழக அரசு அறிவித்தது போல் பஞ்சப்படி 10 சத வீதம் வழங்க வேண்டும், கூட்டுறவு சங்கங்களுக்கு கிடைக்க வேண்டிய தள்ளுபடி மானியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தும், அவற்றை நிறைவேற்றாததை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தில் தங்கராசு, தனலெட்சுமி, மாதர் சங்க ஒன்றிய செயலாளர் பத்மாவதி, நெசவாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர். மழை பெய்ததால் சிலர் நனைந்தபடியும், சிலர் குடை பிடித்தபடியும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
முன்னதாக இளங்கோவன் வரவேற்றார்.
முடிவில் செல்வராசு நன்றி கூறினார்.
ஜெயங்கொண்டம் ராஜாகொல்லை தெருவை சேர்ந்தவர் ரமேஷ் கூலி தொழிலாளியான இவர் பாண்டிசேரியில் கூலி வேலை செய்து வருகிறார். இவரது மகன் மோகன் (வயது20). இவர் ஜெயங்கொண்டத்தில் உள்ள தனது பெரியப்பா பாலசுப்ரமணியன் என்பவர் வீட்டில் தங்கி தனியார் ஐ.டி.ஐ-யில் படித்து வருகின்றார்.
கடந்த 23-ம் தேதியன்று ஐ.டி.ஐ-க்கு செல்வதாக கூறி சென்ற மோகன் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் மோகனின் பெரியப்பா பாலசுப்ரமணியன் உறவினர், நண்பர்கள் வீட்டில் தேடி பார்த்தும் எந்த தகவலும் கிடைக்காததையடுத்து ஜெயங்கொண்டம் போலீசில் புகார் அளித்ததின் பேரில் போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர்.
உடையார்பாளையம் அருகே மணகெதி கிராமத்தை சேர்ந்த கலியபெருமாள் (வயது 55). கூலிதொழிலாளியான இவருக்கு அடிக்கடி தீராத வயிற்றுவலி இருந்துவந்துள்ளது.
இந்நிலையில் சம்பவத்தன்று வயிற்றுவலி அதிகமா இருந்துவந்ததாக கூறப்படுகிறது. இதனால் வலி தாங்கமுடியாமல் வீட்டுக்கு அருகே இருந்த விஷசெடியை அரைத்து குடித்தார். ஆபத்தான நிலையில் இருந்த கலியபெருமாளை இவரது மகன் கமல்ராஜ் சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதனையடுத்து மேல்சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் சிகிச்சைப்பலனின்றி கலியபெருமாள் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து கலியபெருமாள் மகன் கமல்ராஜ் உடையார்பாளையம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






