என் மலர்
செய்திகள்

உடையார்பாளையம் அருகே பள்ளி மாணவன் மாயம்
உடையார்பாளையம்:
உடையார்பாளையம் அருகே வாணத்திரையான்பட்டினம் கிராமத்தை சேர்ந்த கொளஞ்சி இவரது மனைவி அவகஷ்டின்மேரி(வயது36). இவர்களுக்கு 3மகன்கள் உள்ளனர். இதில் முதல் மகன் பிரவீன்குமார்(16).இவர் ஜெயங்கொண்டம் அருகே மகிமைப்புரம் தனியார் மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு படித்துவருகிறார்.
இந்நிலையில் பிரவீன் குமார் தாயார் பொதுத்தேர்வில் மதிபெண் குறைவாக உள்ளது நன்றாக படிக்கவேண்டும் என திட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று காலையில் பள்ளி சென்றவர் வீடு திரும்பவில்லை. மேலும் பிரவீன்குமார் தாயார் பள்ளி ஆசிரியர்களிடம் சென்று கேட்டபோது பிரவீன்குமார் பள்ளி வரவில்லை என ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
இதனையடுத்து அதிர்ச்சியடைந்த பிரவீன்குமார் தாயர் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடு என எங்தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து உடையார்பாளையம் போலீஸ் நிலையத்தில் பிரவீன்குமார் தாயார் அவகஷ்டின்மேரி புகார் கொடுத்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் பாரதிதாசன் வழக்கு பதிந்து மாயமான மாணவன் பிரவீன்குமாரை தேடிவருகிறார்.






