என் மலர்
செய்திகள்

ஜெயங்கொண்டத்தில் இளம்பெண் மாயம்
ஜெயங்கொண்டம்:
ஜெயங்கொண்டம் அடிப்பள்ளம் தெருவைச் சேர்ந்தவர் சிவானந்தம்-ராணி இருவருக்கும் திருமணமாகி மணி வண்ணன் (வயது 23), கீர்த்தனா (15) பிள்ளைகள் உள்ளனர்.
கூலி தொழிலாளியான இவர்கள் கடந்த சில வருடங்களுக்கு முன் சிவானந்தம் மற்றும் மகன், மகள் மூன்றுபேரும் திருப்பூர் சென்று தனியார் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தனர் இந்நிலையில் கடந்த மாதம் பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக ஊருக்கு வந்து பொங்கலை கொண்டாடிவிட்டு மீண்டும் திருப்பூருக்கு செல்ல புறப்பட்டனர்.
அப்பொழுது கீர்த்தனாவை தாய் ராணியின் பாதுகாப்புக்காக இருவரையும் விட்டுவிட்டு சிவானந்தம் மகன் மணிவண்ணனை அழைத்துக்கொண்டு சென்று விட்டார். இந்நிலையில் மகள் கீர்த்தனா கடந்த 24-ந்தேதி அதிகாலை 5 மணிக்கு தாயாரிடம் இயற்கை உபாதை கழிக்க செல்வதாக கூறி வெளியே சென்றவர், வெகுநேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை.
இதுகுறித்து கீர்த்தனாவின் தோழிகள் மற்றும் உறவினர்கள் வீட்டில் தேடிபார்த்தும் எங்கு கிடைக்காத நிலையில் ராணி ஜெயங்கொண்டம் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் செல்வம் வழக்கு பதிந்து காணாமல் போன கீர்த்தனாவை தேடிவருகின்றனர்.






