search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜெயங்கொண்டத்தில் கைத்தறி நெசவாளர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்
    X

    ஜெயங்கொண்டத்தில் கைத்தறி நெசவாளர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்

    ஜெயங்கொண்டம் சி.ஐ.டி.யு. கைத்தறி நெசவாளர் சங்கம் சார்பில் ஜெயங்கொண்டம் மத்திய கூட்டுறவு வங்கி முன்பாக நேற்று காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    ஜெயங்கொண்டம்:

    ஜெயங்கொண்டம் சி.ஐ.டி.யு. கைத்தறி நெசவாளர் சங்கம் சார்பில் ஜெயங்கொண்டம் மத்திய கூட்டுறவு வங்கி முன்பாக நேற்று காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாவட்ட செயலாளர் துரைராஜ் தலைமை தாங்கினார்.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் மகாராஜன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். அக்கட்சியின் மாவட்ட செயலாளர் மணிவேல் மற்றும் சங்க மாவட்ட தலைவர் அழகுதுரை ஆகியோர் கண்டனம் தெரிவித்து பேசினர்.

    ஆர்ப்பாட்டத்தில், நெசவாளர்களுக்கு 30 சதவீதம் கூலி உயர்வு, மாத ஊதியம் ரூ.18 ஆயிரம், நீண்ட நாட் களாக வழங்கப்படாத பயணப்படி ஆகியவற்றை உடனடியாக வழங்க வேண்டும், தமிழக அரசு அறிவித்தது போல் பஞ்சப்படி 10 சத வீதம் வழங்க வேண்டும், கூட்டுறவு சங்கங்களுக்கு கிடைக்க வேண்டிய தள்ளுபடி மானியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தும், அவற்றை நிறைவேற்றாததை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    ஆர்ப்பாட்டத்தில் தங்கராசு, தனலெட்சுமி, மாதர் சங்க ஒன்றிய செயலாளர் பத்மாவதி, நெசவாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர். மழை பெய்ததால் சிலர் நனைந்தபடியும், சிலர் குடை பிடித்தபடியும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

    முன்னதாக இளங்கோவன் வரவேற்றார்.

    முடிவில் செல்வராசு நன்றி கூறினார்.
    Next Story
    ×