என் மலர்tooltip icon

    அரியலூர்

    திருமானூரை தலைமையிடமாக கொண்டு தனி வருவாய் வட்டம் ஏற்படுத்த தீர்மானம் நிறைவேற்றினர்.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம், அரியலூர் மாவட்டம் திருமானூரிலுள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தே.மு.தி..க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், திருமானூர் பகுதியில் வரும் 25 ஆம் தேதி கட்சி நிர்வாகிகளின் சுப நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருகை தரும் 

    தே.மு.தி..க பொருளாளர் பிரேமலதா விஜயகாந்துக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது, அரியலூர் மாவட்டம், திருமானூரை தலைமையிடமாகக் கொண்டு தனி வருவாய் வட்டம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    திருமானூரில் அதிநவீன அரிசி ஆலை, தீயணைப்பு நிலையம், மகளிர் கல்லூரி உள்ளிட்டவைகள் அமைக்க வேண்டும். திருமானூர் கொள்ளிட ஆற்றில் மணல் அள்ளுவதை அனுமதிக்கக் கூடாது. நத்தியார் கால்வாயை தூர்வாரி மதகு அமைக்க வேண்டும். 

    திருமானூர் பேருந்து நிலையத்தில் அனைத்து பேருந்துகளும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


    கூட்டத்துக்கு அக்கட்சியின் ஒன்றியச் செயலாளர்கள் ராஜ்குமார், ஜெகதீசன் ஆகியோர் தலைமை வகித்தனர்.மாவட்ட செயலர் இராம.ஜெயவேல் பங்கேற்று சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் அக்கட்சியின் அனைத்து பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

    திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா நடைபெற்றது.
    அரியலூர் :

    அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள வாழைக்குறிச்சி கிராமத்தில் எழுந்தருளியுள்ள மாரியம்மன், திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதையொட்டி கடந்த 5-ந் தேதி காப்பு கட்டி கொடியேற்றப்பட்டது. 

    பின்னர் தினமும் இரவில் பாரதக் கதை பாராயணம் செய்யப்பட்டது. நேற்று காலை தீமிதி திருவிழாவை முன்னிட்டு பால்குட புறப்பாடு நடைபெற்றது. கொள்ளிடம் ஆற்றில் இருந்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பக்தர்கள் கோவிலுக்கு பால்குடம் எடுத்து வந்தனர். பின்னர் மகா மாரியம்மன், திரவுபதி அம்மன், பரிவார தெய்வங்களுக்கு பால் அபிஷேகம் நடைபெற்றது.

    இதைத்தொடர்ந்து மாரியம்மன், திரவுபதி அம்மனுக்கு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. மாலையில் கொள்ளிடம் ஆற்றில் இருந்து பூங்கரகம், அக்னி கரகம் ஏந்திய பக்தர்கள் மற்றும் தீ மிதிக்க கங்கணம் கட்டிய பக்தர்கள் சிறப்பு பூஜைகளுக்கு பிறகு ஊர்வலமாக கோவிலை நோக்கி வந்தனர். 

    திரளான பக்தர்கள் கோவில் வளாகத்தில் தீமிதி திருவிழாவை காண கூடினர். அக்னி குண்டத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தீ மிதிக்க தயாரானவுடன், கோவில் பூசாரி அக்னி குண்டத்தை வணங்கி முதலில் தீ மிதித்தார். 

    அதைத்தொடர்ந்து பூங்கரகம், அக்னி கரகம் ஏந்திய பக்தர்கள் குண்டம் இறங்கி தீ மிதித்தனர். பின்னர் தீ மிதிக்க கங்கணம் கட்டிய பக்தர்கள் தீ மிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். 

    பின்னர் அக்னி குண்டத்திற்கும், மகா மாரியம்மன், திரவுபதி அம்மன் பரிவார தெய்வங்களுக்கும் மகா தீபாராதனை நடைபெற்றது. இரவில் மகா மாரியம்மன், திரவுபதி அம்மன் வீதி உலா நடைபெற்றது. இன்று (செவ்வாய்க்கிழமை) காலை கஞ்சி வார்த்தல் நிகழ்ச்சிக்குப் பின்னர் மஞ்சள்நீர் விளையாட்டு நடைபெற்றது.
    மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்றது.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், “மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்மா வட்ட கலெக்டர் .பெ.ரமண சரஸ்வதி, தலைமையில் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில், பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 320 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து கலெக்டர் பெற்றார். பின்பு இம்மனுக்கள் மீது சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.


    கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 26 நபர்களுக்கு ரூ.4,42,000 மதிப்பில் இயற்கை மரண ஈமச்சடங்கு நிதியுதவிக்கான காசோலைகளையும் மற்றும் ரூ.10,000 மதிப்பில் கல்வி உதவித்தொகைக்கான காசோலையினையும் வழங்கினார்.

    தொடர் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வந்த 2 பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.
    அரியலூர் :

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள ஜமீன் மேலூர் கிராமம் வடக்கு தெருவை சேர்ந்தவர் கலியபெருமாள் மகன் மொசையன் என்கிற பாலமுருகன் (39), மற்றும் ஆண்டிமடம் பகுதி சாத்தனப் பட்டு கிராமம் நடுத்தெருவை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் மணிகண்டன் (39). 

    இவர்கள் இருவரும் மீன்சுருட்டி, உடையார்பாளையம், ஆண்டிமடம், ஜெயங்கொண்டம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டத்திலும் செயின் பறிப்பு, கொள்ளை, திருட்டு, இருசக்கர வாகனம் திருட்டு உள்ளிட்ட பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்தனர்.

    இவர்கள் இருவரையும் ஜெயங்கொண்டம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் ஜெயங்கொண்டம் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம், டிஎஸ்பி கலைகதிரவன் மற்றும் எஸ் பி பெரோஸ் கான் அப்துல்லா 

    ஆகியோர் பரிந்துரையின் பேரில் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த பாலமுருகன் மற்றும் மணிகண்டன் ஆகிய இருவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி உத்தரவிட்டுள்ளார்.

    கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் பவுர்ணமி கிரிவலம் நடைபெற்றது
    அரியலூர்:


    அரியலூர் மாலட்டம்கங்கை கொண்ட சோழபுரம் பிரகன்நாயகி சமேத பிரகதீஸ்வரர் கோவிலில் 45-ம் ஆண்டு பவுர்ணமி கிரிவலம் நடைபெற்றது.  

    இதையொட்டி நேற்று மாலை 3 மணியளவில் கணக்க விநாயகர் கோவிலில் மகா அபிஷேகம், தீபாராதனை மற்றும் மாலை 4.30 மணியளவில் பிரகதீஸ்வரர் மற்றும் பெரியநாயகி அம்பாளுக்கு மகா அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. 

    மாலை 5.30 மணிக்கு பவுர்ணமி கிரிவலம் நடைபெற்றது. கிரிவலம் கயிலாய வாத்தியங்களுடன் கோவிலில் தொடங்கி மீண்டும் கோவிலை வந்தடைந்தது. 
     

    கிரிவலத்தில் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை மாமன்னன் ராஜேந்திரசோழன் இளைஞர் அணியினர் மற்றும் விழா கமிட்டியினர் செய்து இருந்தனர்.
    மாற்றுத்திறனாளிகள் நலத்திட்ட உதவிகள் பெற விண்ணப்பிக்கலாம் என அரியலூர் மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் மூலம் அரியலூர் மாவட்டத்தில்  தசை சிதைவு நோய் மற்றும் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டோருக்கான பேட்டரியால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலி, இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர், முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் பெறுவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

    எனவே தகுதியுடைய மாற்றுத்திறனாளிகள் தங்களது மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை நகல் மற்றும் தனித்தவம் வாய்ந்த அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், பணிச்சான்று  (கல்லூரி பயில்பவராயின் படிப்பு சான்று), 

    சுயத்தொழில் புரிபவராயின் சுயத்தொழில் புரிவதற்கான சான்று) மார்பளவு புகைப்படம்-2 ஆகியவற்றுடன் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் வருகிற 19-ந்தேதி காலை10 மணிக்கு நடைப்பெறும் பயனாளிகள் தேர்வு முகாமில் கலந்து கொள்ளவும். 

    மேலும் விவரங்களுக்கு 04329-228840 எண்ணில் தொடர்பு கொண்டு பயனடையுமாறு கலெக்டர் ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.
    அரியலூர் அருகே சாமி கும்பிடுவதில் இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக கோவிலை மூடி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை அடுத்து உடையார்பாளையம் அருகே தத்தனூர் பொட்டக்கொல்லை கிராமத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சாமி கும்பிட அதே கிராமத்தில் ஒரே வகையறாவைச் சேர்ந்த இருதரப்பினரிடையே பிரச்சினை இருந்து வந்தது. 

    இந்தநிலையில், அண்மையில் உடையார்பாளையம் ஆர்.டி.ஓ. பரிமளம் இருதரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, சுமூகமாக சாமி கும்பிட இருதரப்பினரையும் அறிவுறுத்தி அனுப்பி வைத்தார். இதையடுத்து கடந்த 10 நாட்களாக திருவிழா நடந்து வந்தது.

    ஆனாலும் கோவிலில் சாமி கும்பிட இருதரப்பினரிடையே பிரச்சினை ஏற்பட்டதால், ஆர்.டி.ஓ. கடந்த 3 நாட்களுக்கு முன்பு கோவிலை பூட்ட உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து தாசில்தார் ஸ்ரீதர் கோவிலை பூட்டினார். இந்நிலையில் பொதுமக்கள் கோயிலை திறந்து சாமி கும்பிட அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். 

    மேலும் பகுதி பொதுமக்கள் கோயிலை திறந்து விழா நடத்த அனுமதிக்கவேண்டும் எனக்கோரி நேற்று முன்தினம் இரவு மறியலிலும் ஈடுபட முயற்சித்தனர். அப்போது போலீசார் தடுத்து நிறுத்தி சமரச பேச்சுவார்த்தைக்கு பின் கலைந்து சென்றனர். மேலும், அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமலிருக்க மாரியம்மன் கோயிலில் போலீசார் பாதுகாப்பு பணியில் தற்போது ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

    இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியுள்ளது. மேலும், உடையார்பாளையம் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் நேற்று இரவு வரை கோவிலை மீண்டும் திறக்க ஆர்.டி.ஓ. பரிமளம் தலைமையில் அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட கிராம முக்கியஸ்தர்கள் முயற்சி செய்தும் அதிகாரிகள் இந்த ஆண்டு திருவிழா நடத்த கூடாது என கண்டிப்பாக தெரிவித்தையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

    தத்தனூர் பொட்டக்கொல்லை மாரியம்மன் கோவிலில் வழக்கமாக மண்டகப்படி மொத்தம் 16 நாட்கள் கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக தொன்று தொட்டு நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் புதிதாக தனித்தனி நபர்களுக்கு என மண்டகப்படி கொடுத்தால் அனைவரும் மண்டகப்படி கேட்டு திருவிழா நடத்துவதில் பிரச்சினை ஏற்படும் என்ற காரணத்தினால் பழைய வழக்கம் முறைப்படியே திருவிழா நடைபெற வேண்டுமென்று ஊர் முக்கியஸ்தர் அனைவரும் கோரிக்கை வைத்துள்ளனர்.

    அதே சமயத்தில் பல ஊர்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் வேலைக்கு செல்கிறவர்கள் திருவிழா முடிந்த பிறகு காப்பு அறுத்தால் மட்டுமே வெளியூர்களுக்கு செல்லவும் சுப நிகழ்ச்சிகள் நடத்தவும் முடியும் என்பது சம்பிரதாயம் நடைமுறையில் உள்ளது. எனவே திருவிழாவை எந்த இடையூறும் இல்லாமல் நடத்த முடிக்குமாறு பொதுமக்கள் அனைவரும் விரும்புகின்றனர். 

    இதை மனதில் கொண்டு அரசு அதிகாரிகள் தலையிட்டு போர்க்கால அடிப்படையில் திருவிழாவை சிறப்பாக நடத்த வழிவகை செய்யுமாறு தத்தனூர் வட்டமலை பொதுமக்கள், ஊர் முக்கியஸ்தர்கள் ஊர் கூட்டத்தில் தெரிவித்துள்ளனர். அரசு உடனே இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊர் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். 

    மேலும் மாரியம்மன் கோவில் திருவிழா முடிந்தவுடன் ஊர் முக்கியஸ்தர்கள் பொதுமக்கள் கூடி ஒரு முக்கிய முடிவு எடுக்கும் வண்ணம் இனி வரும் காலங்களில் எந்த ஒரு தடங்கலும் நடக்கா வண்ணம் கூடி முடிவு எடுக்க மக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

    ஜெயங்கொண்டத்தில் உலக செவிலியர் தினவிழா கொண்டாட்ப்பட்டது.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அன்னை தெரசா நர்சிங் மற்றும் பாராமெடிக்கல் கல்லூரியில் உலக செவிலியர் தினம் நிகழ்ச்சி நடை பெற்றது.

    இதில்  முதலாம் ஆண்டு பயிற்சி செவிலியர் மாணவிகள் தீபஒளி ஏற்றி ஃப்ளாரன்ஸ் நைட்டிங்கேல் உறுதிமொழி ஏற்றனர். 

    நிகழ்ச்சிக்கு கல்லூரி தாளாளர் உஷாமுத்துக்குமரன் தலைமை தாங்கினார். செயலாளர் வேல்முருகன், இயக்குனர் சுரேஷ், பரப்ரஹ்மம் பவுண்டேசன் பொருளாளர் தனலட்சுமி முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு விருந்தினர்கள் மீன்சுருட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் மேகநாதன், அரசு மருத்துவமனை செவிலியர்கள் கண்ணகி, விமலா, சிறுகளத்தூர் தலைவர் தேன் துளி,


    அன்னை தெரசா மெட்ரிக் பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் செந்தில், நிர்வாக குழு உறுப்பினர் பாலமுருகன், மேஜிக் கலைவாணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.  

    முடிவில் நர்சிங் கல்லூரி முதல்வர் சுருதி நன்றி கூறினார்.

    ஜெயங்கொண்டத்தில் கார் மோதி முதியவர் பலியானார்.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள சூசையப்பர்பட்டினம் வடக்கு தெருவை சேர்ந்தவர் அருள்சாமி (வயது70).  

    இவர் தனது சொந்த வேலை காரணமாக சூசையப்பர் பட்டினத்திலிருந்து ஜெயங்கொண்டம் சென்றுவிட்டு மீண்டும் சூசையப்பர்பட்டினம் நோக்கி தனது மொபட்டில் சென்று கொண்டிருந்தார்.  

    அப்போது திருச்சி - சிதம்பரம் சாலையில் ஜெயங்கொண்டம் சூரியமணல் கிராமம் அருகே சென்று கொண்டிருந்தபோது அவருக்கு பின்னால் வந்த கார் முதியவர் ஓட்டி சென்ற மொபட் மீது மோதியது. 

    இதில் அவர் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.  

    அங்கு முதலுதவி சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அருள்சாமி பரிதாபமாக இறந்தார்.  

    இதுகுறித்து ஜெயங்கொண்டம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தமிழரசன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
    மாணவர்கள் தனித்திறமைகளை அடையாளம் கண்டு பயணித்தால் இலக்கை அடையலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    அரியலூர்:

    அரியலூர் அடுத்த விளாங்குடி அண்ணா பல்கலைக் கழக பொறியியல் கல்லூரியில் சமூக நலத்துறை சார்பில் அட்சய திருதியை முன்னிட்டு, இன்றைய இளைஞர்களும், சமுதாயமும் எனும் தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்து கொண்ட கலந்து கொண்ட கலெக்டர் ரமண சரஸ்வதி பேசும் போது,

    அட்சய திருதியை என்றால் வளர்க என்று பொருள். அட்சய திருதியை நாளில் செய்யும் செயல் மென்மேலும் வளரும் என்பது நம்பிக்கை  பெண்களுக்கு பல்வேறு திட்டங்களை தமிழக செயல்படுத்தி வருகிறது. எனவே, பெண்கள் படித்து சமுதாய மாற்றத்தை உருவாக்க வேண்டும். 

    இன்றைய காலக்கட்டத்தில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களும் நடைபெற்று வருகிறது. அதனையும் நாம் தடுக்கப்பட வேண்டும். குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுத்திட உங்களை போன்ற இளைஞர்களின் பங்கு அதிகமாக இருக்க வேண்டும். மாணவர்கள் தமது தனித்திறமையை அடையாளம் கண்டு அதனை நோக்கியே பயணித்தால் இலக்கை அடையளாம் என்றார்.

    பின்னர் அவர், கல்லூரியில் நடைபெற்ற வளாக நேர்காணலில் தேர்ச்சி பெற்ற ஆறு மாணவிகளுக்கு வாழ்த்துகளை தெரிவித்தார்.

    ×