என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஜெயங்கொண்டம் அன்னை தெரசா நா்சிங் மாணவிகள் கல்லூரி வளாகத்தில் உறுதி மொழி ஏற்ற போது எடுத்த படம்.
ஜெயங்கொண்டத்தில் உலக செவிலியர் தினவிழா
ஜெயங்கொண்டத்தில் உலக செவிலியர் தினவிழா கொண்டாட்ப்பட்டது.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அன்னை தெரசா நர்சிங் மற்றும் பாராமெடிக்கல் கல்லூரியில் உலக செவிலியர் தினம் நிகழ்ச்சி நடை பெற்றது.
இதில் முதலாம் ஆண்டு பயிற்சி செவிலியர் மாணவிகள் தீபஒளி ஏற்றி ஃப்ளாரன்ஸ் நைட்டிங்கேல் உறுதிமொழி ஏற்றனர்.
நிகழ்ச்சிக்கு கல்லூரி தாளாளர் உஷாமுத்துக்குமரன் தலைமை தாங்கினார். செயலாளர் வேல்முருகன், இயக்குனர் சுரேஷ், பரப்ரஹ்மம் பவுண்டேசன் பொருளாளர் தனலட்சுமி முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினர்கள் மீன்சுருட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் மேகநாதன், அரசு மருத்துவமனை செவிலியர்கள் கண்ணகி, விமலா, சிறுகளத்தூர் தலைவர் தேன் துளி,
அன்னை தெரசா மெட்ரிக் பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் செந்தில், நிர்வாக குழு உறுப்பினர் பாலமுருகன், மேஜிக் கலைவாணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
முடிவில் நர்சிங் கல்லூரி முதல்வர் சுருதி நன்றி கூறினார்.
Next Story






