என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    FILEPHOTO
    X
    FILEPHOTO

    நலத்திட்ட உதவிகள் பெற விண்ணப்பிக்கலாம்: அரியலூர் கலெக்டர் தகவல்

    மாற்றுத்திறனாளிகள் நலத்திட்ட உதவிகள் பெற விண்ணப்பிக்கலாம் என அரியலூர் மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் மூலம் அரியலூர் மாவட்டத்தில்  தசை சிதைவு நோய் மற்றும் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டோருக்கான பேட்டரியால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலி, இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர், முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் பெறுவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

    எனவே தகுதியுடைய மாற்றுத்திறனாளிகள் தங்களது மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை நகல் மற்றும் தனித்தவம் வாய்ந்த அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், பணிச்சான்று  (கல்லூரி பயில்பவராயின் படிப்பு சான்று), 

    சுயத்தொழில் புரிபவராயின் சுயத்தொழில் புரிவதற்கான சான்று) மார்பளவு புகைப்படம்-2 ஆகியவற்றுடன் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் வருகிற 19-ந்தேதி காலை10 மணிக்கு நடைப்பெறும் பயனாளிகள் தேர்வு முகாமில் கலந்து கொள்ளவும். 

    மேலும் விவரங்களுக்கு 04329-228840 எண்ணில் தொடர்பு கொண்டு பயனடையுமாறு கலெக்டர் ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×