என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோவையில் அங்கன்வாடி ஊழியர்கள் சாலை மறியல் போராட்டம்
- காலை சிற்றுண்டி திட்ட அமலாக்கத்தை சத்துணவு ஊழியர்களிடம் வழங்கிட வேண்டும்
- போராட்டத்தில் ஈடுபட்ட 63 பேர் கைது செய்யப்பட்டனர்.
கோவை,
கோவையில் தெற்கு தாசில்தார் அலுவலகம் முன்பு கோவை மாவட்ட சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்டத் தலைவர் வீரபத்திரன் தலைமை தாங்கினார். இதில் கலந்து கொண்டவர்கள் சிறப்பு பென்சன் ரூ. 6750 வழங்கிட வேண்டும்.
அரசுத் துறை காலிப்பணியிடங்களில் சத்துணவு அங்கன்வாடி ஊழியர்களை ஈர்த்து முறையான காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும்.
காலை சிற்றுண்டி திட்ட அமலாக்கத்தை சத்துணவு ஊழியர்களிடம் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
பின்னர் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனையடுத்து போலீசார் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட58 பெண்கள் உட்பட 63 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதனால் தெற்கு தாசில்தார் அலுவலகம் முன்பு சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.






