search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆலங்குளம் அருகே குடிநீர் குழாய் உடைப்பால் நான்கு வழிச்சாலையில் ஏற்பட்ட பள்ளத்தில் சிக்கி விபத்துக்குள்ளான ஆட்டோ
    X

    சாலை பள்ளத்தில் சிக்கி விபத்துக்குள்ளான ஆட்டோ மற்றும் காயம் அடைந்தவர்களை படத்தில் காணலாம்.

    ஆலங்குளம் அருகே குடிநீர் குழாய் உடைப்பால் நான்கு வழிச்சாலையில் ஏற்பட்ட பள்ளத்தில் சிக்கி விபத்துக்குள்ளான ஆட்டோ

    • சாலையின் நடுவே குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது.
    • மோட்டார்சைக்கிளில் வருபவர்களும் அதே பள்ளத்தில் விழுந்து விபத்தில் சிக்குகின்றனர்.

    தென்காசி:

    நெல்லை-தென்காசி இடையே நான்கு வழிச்சாலை பணிகள் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அடுத்துள்ள சாலைப்புதூரில் ஒருபுறம் சாலை போடும் பணி முழுமையாக முடிவுற்ற நிலையில், மற்றொரு பகுதியில் ஜல்லிகள் கொட்டப்பட்டுள்ளன.

    குழாயில் உடைப்பு

    இதில் சாலை பணி முடிவடைந்த பகுதியில் திடீரென சாலையின் நடுவே குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது.

    மேலும் அதே பகுதியில் பெரிய பள்ளமும் ஏற்பட்டுள்ளதால் வாகனங்கள் அதன் வழியே அணிவகுத்து செல்லும்போது பள்ளத்தில் சிக்கி விபத்துக்கள் ஏற்படுகின்றன. நேற்று மாலையில் பாவூர்சத்திரம் வழியாக நெல்லை நோக்கி சென்று கொண்டிருந்த பயணிகள் ஆட்டோ ஒன்று சாலைப்புதூரில் சாலையின் நடுவே குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்ட இடத்திலிருந்த பள்ளத்தில் சிக்கி விபத்துக்குள்ளானது.

    இதில் ஆட்டோவில் பயணம் செய்தவர்களுக்கு காயங்கள் ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக அனைவரும் உயிர் தப்பினர். இருப்பினும் ஆட்டோ பலத்த சேதம் அடைந்தது.

    கோரிக்கை

    அதேபோன்று மோட்டார் சைக்கிளில் மின்னல் வேகத்தில் வருபவர்களும் அதே பள்ளத்தில் விழுந்து விபத்தில் சிக்குகின்றனர் என்றும், நான்கு வழிச்சாலை பணிகளில் ஈடுபடும் பணியாளர்கள் உடனடியாக சாலைப்புதூரில் சாலையின் நடுவே குடிநீர் குழாய் உடைந்து செல்லும் பகுதியை சீர் செய்ய வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×