என் மலர்
உள்ளூர் செய்திகள்

அமைச்சர் உதயநிதிக்கு மிரட்டல் விடுத்த சாமியார் உருவப்பொம்மையை எரிக்க முயற்சி
- கோவையில்மாவட்ட ஆதி தமிழர் பேரவையை சேர்ந்த 5 பேர் கைது
- போலீசார் தடுத்து நிறுத்தி உருவப்பொம்மையை பறித்து சென்றனர்
கோவை,
சனாதனம் குறித்து பேசிய தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைக்கு ரூ.10 கோடி தருவதாக அயோத்தி சாமியார் ஒருவர் மிரட்டல் விடுத்தார்.
இதற்கு பல்வேறு அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து சாமியார் மீது புகார் அளித்து வருகின்றனர். இந்தநிலையில் கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு கோவை மாநகர், மாவட்ட ஆதி தமிழர் பேரவையினர் சாமியாரின் உருவ பொம்மையை எரிக்க முயன்றனர்.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடுத்து நிறுத்தி உருவப்பொம்மையை பறித்தனர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட 5 பேரை கைது செய்தனர்.
Next Story






