என் மலர்
உள்ளூர் செய்திகள்

விபத்தில் அ.தி.மு.க மாவட்ட இணை செயலாளர் பலி
- பலத்த காயமடைந்த மீனாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஓரத்தூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருக்குவளையை சேர்ந்தவர் நாகப்படன். இவரது மகள் மீனா (வயது 42) திருமணமாகவில்லை.
இவர் அ.தி.மு.க மாவட்ட இணை செயலாளராக இருந்தார். மேலும் கீழ்வேளூர் சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளராக போட்டியிட்டவர்.
முன்னாள் கீழையூர் ஒன்றிய தலைவராக இருந்த மீனா நேற்று திருக்குவளையில் இருந்து காமேஸ்வரத்திற்கு ஒருவரது மோட்டார் சைக்கிளில் ஏறி புறப்பட்டார். அப்போது ரோட்டில் நாய் ஒன்று ஓடியது.
இதனால் மோட்டார் சைக்கிளை ஓட்டியவர் திடீரென பிரேக் போட்டத்தில் பின்னால் அமர்ந்திருந்த மீனா நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயமடைந்த மீனாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஓரத்தூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி மீனா நேற்று இரவு இறந்தார்.
இது குறித்த புகாரின் பேரில் கீழையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






