search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணி தற்போது வரை தொடர்கிறது- நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. பேட்டி
    X

    நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ.

    அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணி தற்போது வரை தொடர்கிறது- நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. பேட்டி

    • நெல்லை மாவட்டம் போதிய மழை இல்லாததால் வறட்சியாக உள்ளது என நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. கூறினார்.
    • அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணியில் இதுவரை எந்த மாற்றமும் இல்லை.

    நெல்லை:

    நெல்லை தச்சநல்லூர் மண்டலத்திற்கு உட்பட்ட ஆனந்தபுரத்தில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.30 லட்சத்தில் சமூதாய நலக்கூடம் கட்ட இன்று அடிக்கல் நாட்டுவிழா நடைபெற்றது.

    இதில் நயினார் நாகேந்தி ரன் எம்.எல்.ஏ., துணைமேயர் கே.ஆர்.ராஜு ஆகியோர் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினர். பின்னர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ., நிருபர்களிடம் கூறியதாவது:-

    வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்

    வேளாண் பட்ஜெட்டில் பரவலாக அதிக திட்டங்கள் சொல்லப்பட்டுள்ளது. வேளாண் பட்ஜெட்டில் குறிப்பிட்ட சில நபர்களுக்கும், சில மாவட்டங்களுக்கும் மட்டுமே திட்டங்கள் ஒதுக்கப் பட்டுள்ளது. போதிய மழை இல்லாததால் நெல்லை மாவட்டம் வறட்சியாக உள்ளது. அதனை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்.

    நெல்லை மாவட்டத்தில் செயல்பட்டு வந்த நெல் ஆராய்ச்சி மையத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட தடுப்பணைகள் இதுவரை செயல்படுத்தபடாமல் உள்ளது. இதுபோன்ற பல்வேறு பிரச்சனைகள் குறித்து சட்டமன்றத்தில் கேள்வி எழுப்ப இருக்கி றோம்.

    அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணி

    தமிழகத்தில் மிகப்பெரிய கட்சிகளில் அ.தி.மு.க.வும் ஒன்று. தற்போது வரை அ.தி.மு.க.வுடன் உள்ள கூட்டணி யில் தான் பா.ஜ.க. உள்ளது.இந்திய அளவில் பா.ஜ.க. மிகப்பெரிய கட்சி.

    உலக அளவில் அதிக எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்களை கொண்ட கட்சி. அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணியில் இதுவரை எந்த மாற்றமும் இல்லை. கீழ் மட்டத்தில் ஒன்றிண்டு பேர் அங்கொன்றும், இங்கொன்று மாக சில பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றனர்.

    அ.தி.மு.க.- பா.ஜ.க. கொள்கை அடிப்படையில் உள்ள கூட்டணிகட்சிகள். தேர்தல் அறிவிக்கும்போது பிரச்சனைகள் இருக்கலாம். வேட்பாளர்கள் அறிவிக் கும்போது ஒன்றுபட்டு வேலைபார்ப்பதில் எந்த கருத்து வேறுபாடும் இருக்காது.

    இவ்வாறு அவர் கூறி னார்.

    Next Story
    ×