search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இடியும் நிலையில் உள்ள கட்டிடங்களை இடிக்க நடவடிக்கை-நகராட்சி ஆணையாளர் தகவல்
    X

    இடியும் நிலையில் உள்ள கட்டிடங்களை இடிக்க நடவடிக்கை-நகராட்சி ஆணையாளர் தகவல்

    • காரமடை நகராட்சியில் நகர்மன்ற மாதாந்திர கூட்டம் நடைபெற்றது
    • அறிவிப்பு பலகையை மக்களின் பார்வைக்கு வைக்க நகராட்சி ஆணையாளர் உத்தரவு

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம் அருகே காரமடை நகராட்சி யில் நகர்மன்ற மாதாந்திர கூட்டம் நடைபெற்றது. நகராட்சி தலைவர் உஷா தலைமை வகித்தார். நகராட்சி ஆணையாளர் மனோகரன், துணை தலைவர் மல்லிகா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டத்தில் நடந்த விவாதங்கள் பின்வருமாறு:

    விக்னேஷ்(பா.ஜ.க): காரமடை நகராட்சியில் குடிநீர் தட்டுப்பாடு பிரச்சனை உள்ளது. இந்த சூழ்நிலையில் புதிதாக குடிநீர் இணைப்புகள் வழங்கப்படுகின்றன. குடிநீர் பிரச்சினையை தீர்க்காமல் புதிதாக இணைப்புகள் வழங்குவதால் மேலும் பிரச்சினை அதிகமாகிறது.

    காரமடை சந்தையில் சுங்க கட்டணம் வசூலிப்பதில் முறைகேடு நடக்கிறது. சுங்கம் வசூலிப்பது தொடர்பாக, நகராட்சி சார்பாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ள கட்டணம் தொடர்பான அறிவிப்பு பலகையை சந்தையில் வைக்க வேண்டும். இல்லை என்றால் ஆர்ப்பாட்டம் செய்யப்படும்.

    நகராட்சிக்கு உட்பட்ட பள்ளிகளில் தூய்மை பணிகள் சரி வர மேற்கொள்ள ப்படுவ தில்லை. பள்ளிகளின் கழிப்பிடத்தை பயன்படுத்தும் குழந்தைகளுக்கு நோய் பாதிப்பு ஏற்படுகிறது என பெற்றோர்கள் புகார் தெரிவிக்கின்றனர். இதற்கு உடனடியாக ஆட்களை நியமித்து கழிப்பிடங்களை பராமரிக்கப்பட வேண்டும்.

    ராமுகுட்டி (தி.மு.க) : காரமடை நகராட்சிக்கு உட்பட்ட சந்தையை இடம் மாற்றம் செய்யக்கூடாது. தற்போது செயல்பட்டு வரும் சந்தையில் போது மான அளவு இடவசதி உள்ளது. புதிதாக சந்தை தேவையில்லை, மேம்ப டுத்தினால் போதுமானது.

    வனிதா (அ.தி.மு.க) : காரமடை சந்தையை இடமாற்றம் செய்தால், விவசாயிகளும், பொதுமக்களும் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். சந்தை இடமாற்றம் செய்யக்கூடாது என ஏற்கனவே தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    குருபிரசாத் (தி.மு.க) : சந்தையை இடமாற்றம் செய்யக்கோரி தீர்மானம் கொண்டு வரப்படவில்லை. கவுன்சிலர்கள் முதலில் அதனை புரிந்து கொள்ள வேண்டும். புதிதாக சந்தை கொண்டுவர தான் தீர்மானம் வந்துள்ளது. இடமாற்றம் செய்யப்படவில்லை. திட்டங்கள் தொடர்பாக கவுன்சிலர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். அரசுக்கு கருத்துரு அனுப்புவதற்கு முன்பாக, கவுன்சிலர்களுடன் ஆலோசனை மேற்கொள்ள வேண்டும். மக்கும் மக்காத குப்பைகள் தரம் பிரித்து தூய்மை பணியாளர்கள் வாங்க வேண்டும்.

    எஸ்.என்.எஸ் ரவிக்கு மார் (தி.மு.க): ராஜீவ் காந்தி நகர், அன்னை வேளாங்கண்ணி நகரில் கழிவுநீர் கால்வாய் அமைத்து சாலை அமைத்து தர வேண்டும். உப்பு தண்ணிக்கு போர்வெல் அமைத்து தர வேண்டும்.

    ராம்குமார் (தி.மு.க) : காரமடை நகராட்சியில் 27 வார்டுகள் உள்ளன. 27 வார்டுகளிலும் தல ஒரு லட்சம் வீதம் ரூ.27 லட்சத்திற்கு சாலைக ளில் பேட்ச் ஒர்க் பார்க்கப்பட்டுள்ளது என கூறப்படுகிறது. ஆனால் 3 வார்டுகளில் மட்டும் தான் பணி நடந்துள்ளது. மற்ற வார்டுகளில் பேட்ச் ஒர்க் பார்க்கப்படவில்லை. இதற்கான பில்களை எங்களிடம் காண்பிக்க வேண்டும். ரவிக்குமார் (தி.மு.க): ராயல் கார்டனில் கடந்த ஒன்றரை ஆண்டுக ளாக தண்ணீர் பிரச்சினை உள்ளது. இதுதொடர்பாக போர்வெல் அமைத்து தர கோரி தொடர்ந்து கேட்டு வருகிறேன். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.

    ஆணையாளர் மனோகரன்: தற்போது இயங்கி வரும் காரமடை சந்தையை இடமாற்றம் செய்யப் போவதில்லை. இந்த சந்தையில் இருந்து ரூ.44 லட்சம் அளவிற்கு நகராட்சிக்கு வருவாய் வருகிறது. இந்த சந்தை கண்டிப்பாக செயல்படும். அதே சமயம் புதிதாகவும் சந்தை அமைக்கலாமா என தான் கருத்து கேட்டு ள்ளோம்.

    பள்ளிகளில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்ப டும். இதை நான் எனது நேரடி கவனத்திற்கு எடுத்துக் கொள்கிறேன். கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். பழுதடைந்து இடியும் தருவாயில் உள்ள கட்டிடங் களை, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக ரூ. 4.25 கோடி நிதி ஒதுக்க கோரி அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. நகராட்சி சார்பில் மக்கள் சேவைகள் தொடர்பாக, அந்த பணிகள் எத்தனை நாட்களுக்குள் முடிக்கப்படும் என்பதற்கான அறிவிப்பு பலகை மக்களின் பார்வைக்கு வைக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×