என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  ஆடி 2-வது வெள்ளியை முன்னிட்டு அம்மன் கோவில்களில் வழிபாடு
  X

  கோப்பணம் பாளையம் அங்காள பரமேஸ்வரி அம்மன், பரமத்திவேலூர் பேட்டை பகவதி அம்மன், பேட்டை சக்தி கண்ணனூர் மகா மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த காட்சி.

  ஆடி 2-வது வெள்ளியை முன்னிட்டு அம்மன் கோவில்களில் வழிபாடு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • இரண்டாம் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு அம்மனுக்கு 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
  • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

  பரமத்தி வேலூர்:

  நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் பேட்டை ஸ்ரீ சக்தி கண்ணனூர் புது மாரியம்மன் கோவில் , கோப்பணம் பாளையம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில், பேட்டை பகவதி அம்மன் கோவிலில் ஆடி மாத இரண்டாம் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம் ,பஞ்சாமிர்தம் ,விபூதி, தேன் உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

  பின்னர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்க ளுக்கு காட்சி அளித்தனர்.இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராள மான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

  அதேபோல் நன்செய் இடையாறு மகா மாரியம்மன் கோவில், பரமத்தி வேலூர் செல்லாண்டிஅம்மன் கோவில், பாண்டமங்கலம் மாரியம்மன், பகவதி அம்மன் கோவில்,கொந்தளம் மாரியம்மன் கோவில், ஆனங்கூர் மாரியம்மன், வடகரையாத்தூர் மாரியம்மன் கோவில், பரமத்தி அங்காளம்மன் கோவில் மற்றும் பரமத்தி வேலூர் சுற்றுவட்டார பகுதியில் உள்ள அம்மன் கோவில்களில் ஆடி மாத 2வது வெள்ளிக்கி ழமையை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதியை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்த அருள் பெற்றனர்.

  Next Story
  ×