என் மலர்
உள்ளூர் செய்திகள்

பீளமேடு அருகே பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற வாலிபர் கைது
- பொன்மணி கழுத்தில் அணிந்திருந்த 10 அரை பவுன் தங்க செயினை மர்மநபர் பறித்தார்.
- அர்ஜூனிடமிருந்து ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் மதிப்புள்ள தங்க செயினை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கோவை,
கோவை பீளமேடு கள்ளிமேடு வீதியை சேர்ந்தவர் ஜான்சன். இவரது மனைவி பொன்மணி (வயது 57). இவர் அந்தப்பகுதியில் பேன்சி கடை நடத்தி வருகிறார்.
சம்பவத்தன்று இரவு பொன்மணி வழக்கம்போல் கடையில் வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் பொன்மணி கழுத்தில் அணிந்திருந்த 10 அரை பவுன் தங்க செயினை பறித்து கொண்டு தனது மோட்டார் சைக்கிளில் தப்பி செல்ல முயன்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த பொன்மணி சத்தம் போட்டார்.
அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் வாலிபரை மடக்கி பிடித்தனர். பின்னர் தர்மஅடி கொடுத்து பீளமேடு போலீசில் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில் அந்த வாலிபர் கோவை பீளமேடு கிரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த அர்ஜூன் (38) என்பது தெரிய வந்தது.
அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் மதிப்புள்ள தங்க செயினை போலீசார் பறிமுதல் செய்தனர். கடையில் தனியாக இருந்த பெண்ணிடம் வாலிபர் வழிப்பறி செய்ய முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






