என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்

ஆலங்குளம் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து இளம்பெண் பலி

- கடந்த 10-ந்தேதி காலை மணிமாறன் தனது மனைவி அனிதாவை அழைத்துக் கொண்டு சங்கரன்கோவில் ஆஸ்பத்திரிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
- அப்போது அமுதாபுரம் விலக்கு பகுதியில் சென்றபோது அனிதாவுக்கு திடீரென தலை சுற்றல் ஏற்பட்டு மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்தார்.
நெல்லை:
ஆலங்குளத்தை அடுத்த கீழே வீராணம் மேட்டுப் பட்டி தெருவை சேர்ந்தவர் மணிமாறன். இவர் தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
இவருக்கு கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு அனிதா (வயது 24) என்ற பெண்ணு டன் திருமணம் ஆனது.
கடந்த 10-ந்தேதி காலை மணிமாறன் தனது மனைவி அனிதாவை அழைத்துக் கொண்டு சங்கரன்கோவில் ஆஸ்பத்திரிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது ஆலங்குளம்-சங்கரன்கோவில் சாலையில் அமுதாபுரம் விலக்கு பகுதி யில் சென்றபோது அனிதா வுக்கு திடீரென தலை சுற்றல் ஏற்பட்டு மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் தலையில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
உடனடியாக அந்த வழி யாக சென்றவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலன் இன்றி நேற்று இரவு அனிதா பரிதாபமாக உயிரிழந்தார்.
இது தொடர்பாக ஊத்து மலை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணம் ஆகி ஒரு வருடத்திலேயே விபத்தில் இளம்பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.