என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    எடப்பாடியில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் பெண் பலி
    X

    உயிரிழந்த ராணியின் உறவினர்களுக்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்த நகர மன்ற தலைவர் டி.எஸ்.எம்.பாஷா. 

    எடப்பாடியில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் பெண் பலி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • எடப்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர் கன மழை பெய்து வருவதால் வீட்டின் சுவர் இன்று அதிகாலையில் சரிந்து விழுந்தது.
    • இதில் இடிபாடுகளில் சிக்கிய ராணி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்

    எடப்பாடி:

    எடப்பாடி நகராட்சி எல்லைக்கு உட்பட்ட, மேட்டு தெரு இப்பகுதியைச் சேர்ந்தவர் ராணி (65), இவரது கணவர் குமார். இவர் ஏற்கனவே இறந்துவிட்ட நிலையில் ராணி இங்குள்ள பெரியார் படிப்பகம் அருகே உள்ள வீட்டில் தனியாக வசித்து வந்தார்.

    இந்நிலையில் எடப்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர் கன மழை பெய்து வருவதால் ராணி குடியிருந்த வீட்டின் சுவர் இன்று அதிகாலையில் சரிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளில் சிக்கிய ராணி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த எடப்பாடி போலீசார் ராணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவ இடத்திற்குச் சென்ற எடப்பாடி நகர மன்ற தலைவர் டி.எஸ்.எம் பாஷா , இறந்தவரின் உறவினர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

    ராணியின் இறப்பு குறித்து அப்பகுதியில் காவல்துறை மற்றும் வருவாய் துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வீடு இடிந்து பெண் பலியான சம்பவம் அப்பகுதி பொதுமக்களுடைய சோகத்தை ஏற்படுத்தியது.

    Next Story
    ×