என் மலர்
உள்ளூர் செய்திகள்

தலை குப்புற கவிழ்ந்த லாரியை படத்தில் காணலாம்.
மங்கலம்பேட்டை அருகே தலை குப்புற கவிழ்ந்த டேங்கர் லாரி
- இன்று அதிகாலையில், எதிர்பாராத விதமாக நிலைத் தடுமாறிதலைக் குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
- லாரியை பள்ளிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த டிரைவர் ஓட்டி வந்தார்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் மங்கலம்பேட்டை அருகே உள்ள பள்ளிப்பட்டு கிராமத்தில் இருந்து பைபாஸ் சாலை பிரியும் இடத்தில்,சிமெண்ட் சாம்பல் ஏற்றிச் செல்லும் டேங்கர் லாரி ஒன்று, இன்று அதிகாலையில், எதிர்பாராத விதமாக நிலைத் தடுமாறிதலைக் குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தால், மங்கலம்பேட்டை- விருத்தாசலம் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்துக்குள்ளான லாரியை பள்ளிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த டிரைவர் ஓட்டி வந்தார். இந்த சம்பவம் குறித்து மங்கலம்பேட்டை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
Next Story






