என் மலர்
உள்ளூர் செய்திகள்

பொள்ளாச்சியில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சிறப்பு குறைதீர்ப்பு முகாம் நாளை நடக்கிறது
மாற்றுத்திறனாளிகள் ஆதார் கார்டு மற்றும் புகைப்படத்துடன் நேரடியாக கலந்து கொண்டு அரசின் நலத்திட்ட உதவிகளை பெற்று செல்லலாம்.
கோவை,
கோவை மாவட்டத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, பொள்ளாச்சியில் நாளை (25-ந்தேதி) மாற்றுத்திறனாளிகள் மருத்துவ முகாம் நடக்கிறது.
மேலும் சப்-கலெக்டர் தலைமையில் சிறப்பு குறைதீர்ப்பு கூட்டமும் அன்றைய தினம் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடக்க உள்ளது.
இதில் தேசிய அடையாள அட்டை பெற்ற மாற்றுத்திறனாளிகள் ஆதார் கார்டு மற்றும் புகைப்படத்துடன் நேரடியாக கலந்து கொண்டு அரசின் நலத்திட்ட உதவிகளை பெற்று செல்லலாம். இதுவரை தேசிய அடையாள அட்டை பெறாத வர்கள் ஆதார் கார்டு மற்றும் 4 பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் ஆகியவற்றுடன் முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
மேற்கண்ட தகவலை கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் தெரிவித்து உள்ளார்.
Next Story






