search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சூலூர் அருகே டாக்டர்கள் இல்லாமல் செயல்பட்ட தனியார் ஆஸ்பத்திரி
    X

    சூலூர் அருகே டாக்டர்கள் இல்லாமல் செயல்பட்ட தனியார் ஆஸ்பத்திரி

    • நர்சிங் படிப்பை பாதியில் கைவிட்ட பெண் உள்பட 2 பேர் மருந்துகளை பரிந்துரைத்ததும், ஊசிசெலுத்தியதும் தெரியவந்தது
    • யாரோ ஒரு டாக்டரிடம் வீடியோ கால் மூலம் பேசி சிகிச்சை அளித்ததாகவும் தகவல்

    சூலூர்,

    கோவை சூலூர் அருகே உள்ள மயிலம்பட்டி பகுதியில் டாக்டர்கள் இன்றி முறையாக மருத்துவம் பயிலாத 2 பேர் ஆஸ்பத்திரி நடத்தி வருவதாக மாவட்ட சுகாதார துறையினருக்கு புகார்கள் சென்றது.

    அதன்பேரில் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் (பொறுப்பு) மீரா விசாரணை நடத்த உத்தரவிட்டார். அந்த பகுதியைச் சேர்ந்த சுகாதார ஆய்வாளர் நேரில் சென்று விசாரணை நடத்தினார்.

    அந்த ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் யாரும் இல்லை. மருத்துவமனைக்கு வரும் டாக்டர்கள் குறித்த எந்தவித விவரமும் இல்லை.

    ஆஸ்பத்திரியில் நர்சிங் படிப்பை பாதியில் கைவிட்ட பெண் உள்பட 2 பேர் டாக்டர் பெயரில் மருந்துகளை பரிந்துரைத்ததும், நோயாளிகளுக்கு ஊசி செலுத்தியதும் தெரியவந்தது. அவர்கள் யாரோ ஒரு டாக்டரிடம் வீடியோ கால் மூலம் பேசி சிகிச்சை அளித்ததாகவும் கூறப்படுகிறது.

    இதுதொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு சுகாதாரத்துறையினர் சூலூர் போலீஸ்நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    இதுபற்றி மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் (ெபாறுப்பு) மீரா கூறியதாவது:-

    மயிலம்பட்டி பகுதியில் 24 மணி நேர மருத்துவமனை என்ற பெயரில் தனியார் மருத்துவமனை செயல்பட்டது. இந்த மருத்துவமனை மீது பொதுமக்கள் புகார் அளித்ததின் பேரில் அங்கு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதுகுறித்து விசாரித்த பின் போலீசாரிடம் புகார் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    வழக்குப்பதிந்த பின் அடுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதுகுறித்து மாவட்ட கலெக்டரின் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×