என் மலர்
உள்ளூர் செய்திகள்

நாங்குநேரி அருகே இன்று காலை நின்ற பஸ் மீது மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி- நண்பர் படுகாயம்
- ஆறுமுகம், ராமகிருஷ்ணன் ஆகியோர் இன்று காலை மோட்டார் சைக்கிளில் நாங்குநேரி நோக்கி சென்றனர்.
- மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட ஆறுமுகம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
களக்காடு:
தூத்துக்குடி மாவட்டம் மீனாட்சிபட்டியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 28). அதே பகுதியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (31). கூலி வேலை செய்யும் நண்பர்களான இவர்கள் 2 பேரும் இன்று காலை மோட்டார் சைக்கிளில் நாங்குநேரி நோக்கி சென்றனர்.
நின்ற பஸ் மீது மோட்டார் சைக்கிள் மோதல்
மோட்டார் சைக்கிளை ராமகிருஷ்ணன் ஓட்டி சென்றார். மோட்டார் சைக்கிள் நாங்குநேரி சோதனை சாவடியை கடந்து நம்பி நகர் பகுதியில் சென்ற போது பயணிகளை ஏற்றுவதற்காக நான்கு வழிச்சாலையில் பஸ்சை டிரைவர் திடீரென நிறுத்தினார். அப்போது பின்னால் வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் பஸ்சின் பின்புறம் பயங்கரமாக மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட ஆறுமுகம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ராமகிருஷ்ணனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. விபத்தில் மோட்டார் சைக்கிள் பஸ்சின் கீழ் பகுதியில் சிக்கி கொண்டது.
தீவிர சிகிச்சை
தகவல் அறிந்ததும் நாங்குநேரி இன்ஸ்பெக்டர் ஆதம் அலி மற்றும் போலீ சார் விரைந்து சென்று படுகாயம் அடைந்த ராமகிருஷ்ணனை மீட்டு நாங்குநேரி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் பலியான ஆறுமுகம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோ தனைக்காக நெல்லை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் விசாரணை
இதுதொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் வழக்க மாக அணுகு சாலையில் பேருந்தை நிறுத்தி பயணி களை ஏற்று வதற்கு பதில் நான்கு வழிச்சாலையில் பஸ்சை நிறுத்தியதால் விபத்து ஏற்பட்டுள்ளது தெரிய வந்தது.
மேலும் தொழிலாளர்கள் 2 பேரும் ஒரு வழக்கு தொடர்பாக நாங்குநேரி கோர்ட்டுக்கு சென்ற போது விபத்து நடந்திருப்பது தெரிய வந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.






