என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  பணகுடி அருகே திருமண ஆசை காட்டி கல்லூரி மாணவி பலாத்காரம் பாதிரியார் மகனுக்கு வலைவீச்சு
  X

  பணகுடி அருகே திருமண ஆசை காட்டி கல்லூரி மாணவி பலாத்காரம் பாதிரியார் மகனுக்கு வலைவீச்சு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள கலந்தபனை பகுதியை சேர்ந்தவர் அனிஷ் பவுல் ( வயது 25).
  • மாணவிக்கும் அனிஷ் பவுலுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இந்த பழக்கம் காதலாக மாறியது. இருவரும் பல இடங்களில் சுற்றித்திரிந்து ஜாலியாக இருந்ததாக கூறப்படுகிறது.

  நெல்லை:

  நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள கலந்தபனை பகுதியை சேர்ந்தவர் அனிஷ் பவுல் ( வயது 25).

  காதல்

  பாதிரியாரான இவரது தந்தை அந்த பகுதியில் கிறிஸ்தவ சபை ஒன்றை நடத்தி வந்துள்ளார்.இந்த சபைக்கு அதே பகுதியை சேர்ந்த 22 வயது கல்லூரி மாணவி ஒருவர் வந்துள்ளார். அப்போது மாணவிக்கும் அனிஷ் பவுலுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இந்த பழக்கம் காதலாக மாறியது. இருவரும் பல இடங்களில் சுற்றித்திரிந்து ஜாலியாக இருந்ததாக கூறப்படுகிறது.

  திருமணத்திற்கு மறுப்பு

  இந்நிலையில் அந்த மாணவி தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அனிஷ் பவுலிடம் வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.

  ஆனால் அதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததோடு, அந்த மாணவியுடன் பேசு வதையும் நிறுத்தி விட்டார்.இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி நடந்த சம்பவங்கள் குறித்து தனது பெற்றோரிடம் கூறியுள்ளார்.

  வழக்குப்பதிவு

  பின்னர் தன்னை ஏமாற்றி பலாத்காரம் செய்த அனிஷ்பவுல் மீது நடவடிக்கை எடுக்ககோரி வள்ளியூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் அனிஷ்பவுல் திருமண ஆசைக்காட்டி மாணவியை பலாத்காரம் செய்தது தெரியவந்தது.

  இதைத்தொடர்ந்து அனிஷ் பவுல் மற்றும் அவரது தந்தை, உறவினர் ஒருவர் என 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  Next Story
  ×