என் மலர்
உள்ளூர் செய்திகள்

காரமடை அருகே வீட்டின் முன்பு நிறுத்திய கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு
- உடனடியாக சம்பவம் குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
- முதற்கட்ட விசாரணையில் காரில் இருந்த பேட்டரியில் ஷார்ட் சர்க்யூட் ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரிகிறது.
மேட்டுப்பாளையம்,
கோவை காரமடை டி.ஜி.புதூரை சேர்ந்தவர் ஜெயக்குமார்(வயது42).
இவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் பெங்களூருவில் தங்கி அங்குள்ள தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தில் என்ஜினியராக பணிபுரிந்து வருகிறார்.
இந்த நிலையில் ஜெயக்கு மார், தனது தாய் தந்தையை பார்ப்பதற்காக நேற்று தனது சொந்த ஊரான டி.ஜி புதூருக்கு காரில் வந்தார். இரவில் அனை வரும் சாப்பிட்டு விட்டு தூங்க சென்று விட்டனர்.
இந்த நிலையில் இன்று அதிகாலை ஜெயக்குமாரின் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது.
இதை பார்த்து ஜெயக்குமார் அதிர்ச்சி அைடந்தார். உடனடியாக சம்பவம் குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சில மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீ முற்றிலும் அணைக்கப்பட்டது.தகவல் அறிந்த காரமடை போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
முதற்கட்ட விசாரணையில் காரில் இருந்த பேட்டரியில் ஷார்ட் சர்க்யூட் ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரிகிறது. இருப்பினும் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. வீட்டின் முன்பு நிறுத்திய கார் தீப்பற்றி எரிந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






