என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவையில் பெண் மீது மோதி தூக்கி வீசிய கார்
    X

    கோவையில் பெண் மீது மோதி தூக்கி வீசிய கார்

    • படுகாயம் அடைந்த அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு காந்திபுரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
    • கண்காணிப்பு காமிரா காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கோவை,

    வடகோவை சிந்தாமணியை சேர்ந்தவர் கூலித் தொழிலாளி வேல்முருகன். இவரது மனைவி லீலாவதி. (வயது 32). இவர் அந்த பகுதியில் வீட்டு வேலை செய்து வருகிறார்.

    நேற்று காலை லீலாவதி வழக்கம்போல் வேலைக்காக தனது வீட்டில் இருந்து பூ மார்க்கெட் வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார்.

    கென்னடி தியேட்டர் அருகே சென்ற போது எதிரே அதி வேகமாக வந்த கார் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு பின்னர் லீலாவதி மீது மோதியது. இதில் லீலாவதி சுமார் 50 மீட்டர் தூரம் தூக்கி வீசப்பட்டார்.

    இதில் படுகாயம் அடைந்த அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு காந்திபுரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த விபத்தை ஏற்படுத்தி யவர் வட மாநிலத்தைச் சேர்ந்த உத்தம்குமார் என்பதும், அதிவேகமாக வந்ததால் இந்த விபத்து ஏற்பட்டதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    இதுகுறித்து வெரை ட்டிஹால் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இதற்கிடையே அதிவேகமாக வரும் கார் இருசக்கர வாகனம் மற்றும் லீலாவதி மீது மோதும் கண்காணிப்பு காமிரா காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×