என் மலர்
உள்ளூர் செய்திகள்

சூலூர் அருகே 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 58 வயது விவசாயி
- மாணவி வழக்கம் போல பால் வாங்க சென்ற போது மீண்டும் விவசாயி தங்கவேலு பாலியல் தொல்லை கொடுத்தார்.
- போலீசார் விவசாயி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
கோவை,
கோவை சூலூர் அருகே பீடம்பள்ளியை சேர்ந்தவர் 5 வயது மாணவி.
இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று மாணவியின் தாய் மாவட்ட குழந்தைகள் நல அலுவலரை தொடர்பு கொண்டு அந்த பகுதியை சேர்ந்த விவசாயி தங்கவேல் (வயது58) என்பவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் அளித்தார்.
புகாரின் பேரில் குழந்தைகள் நல அலுவலர் ஏஞ்சலினா, மாணவியின் வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினார். விசாரணையில் தங்கவேலுவின் வீட்டிற்கு மாணவி தினசரி பால் வாங்க செல்வது வழக்கம்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு மாணவி பால் வாங்க சென்ற போது விவசாயி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். ஆனால் நடந்த சம்பவத்தை மாணவி யாரிடமும் சொல்லவில்லை.
சம்பவத்தன்று மாணவி வழக்கம் போல பால் வாங்க சென்ற போது மீண்டும் விவசாயி தங்கவேலு பாலியல் தொல்லை கொடுத்தார். இதன் காரணமாக மாணவி வலியால் அலறி துடித்தார். மேலும் மாணவிக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து மாணவியின் தாய் அவரிடம் விசாரித்த போது அவர் தனக்கு நேர்ந்தவற்றை தாயிடம் தெரிவித்தார்.அவர் குழந்தைகள் நல அலுவலர் ஏஞ்சலினாவிடம் தெரிவிக்க, அவர் இதுகுறித்து சூலூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் 5 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவசாயி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். தற்போது போலீசார் தலைமறைவாக உள்ள அவரை தேடி வருகிறார்கள்.






