search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவையில் கஞ்சா பதுக்கி விற்ற 9 பேர் கைது
    X

    கோவையில் கஞ்சா பதுக்கி விற்ற 9 பேர் கைது

    • பஸ் நிலையத்தில் சிலர் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
    • கஞ்சாவை பதுக்கி விற்ற மனோஜ் பிரகாசை போலீசார் கைது செய்தனர்.

    கோவை,

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி புதிய பஸ் நிலையத்தில் சிலர் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து சப் இன்ஸ்பெக்டர் முகமது தலைமையிலான போலீசார் தகவல் வந்த இடத்திற்கு விரைந்து சென்று கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்த திருச்சூரைச் சேர்ந்த சரத் (வயது 24), சரத் பாபு (22) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    மாக்கினாம்பட்டி சுடுகா டு அருகே கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்த உஞ்சுவேலம் பட்டியைச் சேர்ந்த காளிதாஸ் (27) என்பவரை போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். புளியம்பட்டி பஸ் நிலையத்தில் கஞ்சாவை பதுக்கி வைத்த விற்பனை செய்த திப்பம்பட்டியை சேர்ந்த பாலமுருகன் (46) என்பவரை போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். அட்டக்கடை பஸ் நிலையத்தில் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்த வால்பாறை சேர்ந்த மனோஜ் பிரகாஷ் (20) என்ற வரை போலீசார் கைது செய்தனர்.

    சிங்காநல்லூர் வெள்ள லூர் ரோட்டில் உள்ள ரெயில்வே தண்டவாள பகுதியில் சிலர் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதனை எடுத்து சிங்கா நல்லூர் சப்-இன்ஸ்பெக்டர் கஸ்தூரி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோத னை செய்தனர். அப்போது அங்கு கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்த லட்சுமணன் நகரைச் சேர்ந்த சூர்யா (29), ஒண்டிப்புதூரைச் சேர்ந்த ஸ்ரீ ராகவேந்தர் (25) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து ஒரு கிலோ கஞ்சா, மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.

    உடையாம்பாளையம் திருமலை நகரில் கஞ்சாவை பதுக்கி விற்ற சின்ன வேடம்பட்டியைச் சேர்ந்த சிவ பிரசாத் (25) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ஒரு கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. ராமநா தபுரம் சிக்னல் அருகே கஞ்சாவை பதுக்கி விற்ற நிர்மல் குமார் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 100 கிராம் கஞ்சா, ஒரு ஆட்டோ, ரூ.2 ஆயிரம் ரொக்க பணம், 2 செல்போன் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    Next Story
    ×