என் மலர்
உள்ளூர் செய்திகள்

நாகையில் கஞ்சா விற்ற 5 பேர் கைது
- நாகையில் கஞ்சா விற்ற 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
- அவர்களிமிருந்து 21 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
நாகை மாவட்டத்தில் கஞ்சா விற்பனையை தடுக்க தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடும்படி போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்தரவிட்டார்.
அதன்படி துணை போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் கஞ்சா விற்பனையை தடுக்கும் வகையில் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் நாகூர் ஜடையினா ஹாஜியார் தெருவில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் போலீசார் அங்கு சென்று கண்காணிப்பு பணி மேற்கொண்டனர்.
அப்போது சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்த 5 பேரை பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் அவர்கள் முகமது இத்ரீஸ் (வயது29), கண்ணன் (27), சமீர் (19), ஹஜ்புதீன் (21), முகமது சைபு (19) ஆகியோர் என்பதும், இவர்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து நாகூர் போலீசார் அவர்கள் 5 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 21 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதன் மதிப்பு ரூ.2 லட்சத்தது 10 ஆயிரம் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர்.






