என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  தாழையூத்து அருகே நான்கு வழிச்சாலையில் கார் கவிழ்ந்து 4 பேர் படுகாயம்
  X

  தாழையூத்து அருகே நான்கு வழிச்சாலையில் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான கார்.

  தாழையூத்து அருகே நான்கு வழிச்சாலையில் கார் கவிழ்ந்து 4 பேர் படுகாயம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஆந்திரா மாநிலம் கடப்பா மாவட்டத்தை சேர்ந்த 5 பேர் கேரளா மாநிலம் சபரிமலைக்கு காரில் சென்றுள்ளனர்.
  • பின்னர் அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு நாகர்கோவில் வழியாக நான்கு வழிச்சாலையில் இன்று காலை மதுரை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

  நெல்லை:

  ஆந்திரா மாநிலம் கடப்பா மாவட்டத்தை சேர்ந்த 5 பேர் கேரளா மாநி லம் சபரிமலைக்கு காரில் சென்றுள்ளனர்.

  பின்னர் அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு நாகர்கோவில் வழியாக நான்கு வழிச்சாலையில் இன்று காலை மதுரை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

  அப்போது நெல்லையை அடுத்த தாழையூத்து அருகே வந்தபோது ரோட்டோர பள்ளத்தில் எதிர்பாராத விதமாக கார் கவிழ்ந்தது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

  இது குறித்து தகவல் அறிந்த தாழையூத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காரில் இடிபாட்டில் சிக்கி இருந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

  அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக தாழையூத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  Next Story
  ×