என் மலர்
உள்ளூர் செய்திகள்

தஞ்சை ராஜகோபாலசாமி கோவிலில் 31-ந்தேதி சித்திரை நட்சத்திர சிறப்பு வழிபாடு
- இக்கோவிலில் ஒவ்வொரு தமிழ் மாதமும் வரும் சித்திரை நட்சத்திரத்தன்று சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம்.
- மூன்று சக்கரத்தாழ்வார்களும் மாலையில் ஒருசேர பக்தர்களுக்கு காட்சி தருகின்றனர்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் வடக்கு வீதியில் ராஜகோபால சுவாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு மூலஸ்தானத்தில் விஜய வல்லி சுதர்சன வல்லி சமேதராக சக்கரத்தாழ்வார் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.
தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்தை சார்ந்த 88 கோவில்களில் ஒன்றாக திகழ்கிறது. இந்த கோவிலில் ஒவ்வொரு தமிழ் மாதமும் சித்திரை நட்சத்திரம் அன்றும் சக்கரத்தாழ்வாரும் சிவேந்திரருக்கும் சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம்.
அதன்படி வைகாசி மாதம் சித்திரை நட்சத்தி ரத்தை முன்னிட்டு வருகின்ற 31-ம்தேதி (புதன்கிழமை) காலை 8.30 மணிக்கு சக்கரத்தாழ்வாருக்கு சிறப்பு பாலாபிஷேகம் , திருமஞ்சனம் மற்றும் சிறப்பு அலங்காரம் தீபாராதனை நடக்கிறது.
அன்றைய தினத்தில் மூன்று சக்கரத்தா ழ்வார்களும் மாலை வேளையில் ஒருசேர பக்தர்களுக்கு காட்சி தருகின்றனர்.
சித்திரை நட்சத்திர சிறப்பு வழிபாட்டிற்காக ஏற்பாடு களை தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம் பரம்பரை அறங்காவலர் பாபாஜிராஜா பான்ஸ்லே , உதவி ஆணையர் கவிதா, கோவில் செயல் அலுவலர் மாதவன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.