என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோவையில் ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் 3 பவுன் நகை திருட்டு
- கூட்டம் அதிகமாக இருப்பதை பயன்படுத்தி சீதாம்பாள் கழுத்தில் அணிந்திருந்த நகையை மர்மநபர் பறித்து தப்பி சென்றார்.
- புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சி.சி.டி.வி. காமிரா காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகிறார்கள்
கோவை,
கோவை சுண்டக்கா முத்தூரை சேர்ந்தவர் சீதாம் பாள் (வயது 82). இவர் அப்பகுதியில் பெட்டி கடை வைத்து நடத்தி வருகிறார்.
சம்பவத்தன்று இவர் டவுன்ஹாலில் இருந்து ராமநாதபுரத்துக்கு தனியார் பஸ்சில் சென்று கொண்டி ருந்தார். அப்போது பஸ் ராமநாதபுரம் சிக்னல் அருகே சென்ற போது மர்மநபர் ஒருவர் கூட்டம் அதிகமாக இருப்பதை பயன்படுத்தி சீதாம்பாள் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்க செயினை நைசாக பறித்து தப்பி சென்றார். சிறிது நேரம் கழித்து கழுத்தில் அணிந்திருந்த நகையை காணாததை கண்டு அவர் அதிர்ச்சி யடைந்தார்.
பின்னர் அவர் இதுகுறித்து ராமநாதபுரம் போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சி.சி.டி.வி. காமிரா காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகிறார்கள். ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் நகையை பறித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






