search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவையில் ஆசிரியர் வீட்டில் 26 பவுன் நகை கொள்ளை
    X

    கோவையில் ஆசிரியர் வீட்டில் 26 பவுன் நகை கொள்ளை

    • மர்மநபர்கள் போலீசில் சிக்காமல் இருப்பதற்காக வீடு முழுவதும் மிளகாய் ெபாடியை தூவி சென்றனர்.
    • போலீசார் அப்பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி காமிரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.

    கோவை,

    கோவை நஞ்சுண்டாபுரம் புதூர் பகுதியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன்(34).

    இவர் வெள்ளக்கிணறு அருகே உள்ள பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி சந்தியா என்ற மனைவி உள்ளார்.

    இவர்களுடன் ராதாகிருஷ்ணனின் தந்தை பாண்டியராஜன் மற்றும் தாயார் சாந்தியும் ஒன்றாக வசித்து வருகின்றனர். இவர்கள் சொந்தமாக அந்த பகுதியில் பேன்சி ஸ்டோரும் நடத்தி வருகிறன்றனர்.

    நேற்று மதியம் ராதாகிருஷ்ணன் தனது தாய் மற்றும் மனைவியுடன், பேன்சி ஸ்டோருக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக வீட்டை பூட்டி விட்டு கோவைக்கு சென்று விட்டனர். பாண்டியராஜனும் மோட்டார் சைக்கிளை சரி செய்ய காந்திபுரம் சென்றார்.

    இந்த நிலையில் பாண்டியராஜன் வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் முன் பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதை பார்த்து அதிர்ச்சியான அவர் உள்ளே சென்று பார்த்தார்.

    அப்போது வீட்டிற்குள் இருந்த பீரோவும் திறந்து கிடந்ததுடன், அதில் இருந்த துணிகளும் ஆங்காங்கே சிதறி கிடந்தன. இதையடுத்து பீரோவை சோதனை யிட்டார். அதில் வீட்டில் வைத்திருந்த செயின், ஆரம், நெல்லிக்காய் மாலை, 2 ஜோடி கம்மல் என மொத்தம் 26 பவுன் நகைகள் மாயமாகி இருந்தது.

    இவர்கள் வீட்டை விட்டு வெளியில் சென்றதை நோட்டமிட்ட மர்மநபர்கள், அதன்பின்னர் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து நகையை திருடி சென்றதும்,போலீசில் சிக்காமல் இருப்பதற்காக வீடு முழுவதும் மிளகாய் ெபாடியை தூவி சென்றதும் தெரிய வந்தது.

    இதுகுறித்து கோவில்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டனர். வீட்டில் தடயங்கள் ஏதாவது உள்ளதா எனவும் சோதனை செய்தனர்.

    மேலும் அந்த பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி காமிரா காட்சிகளை ஆய்வு செய்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்மநபர்களை தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×