என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோவை சிமெண்ட் நிறுவனத்தில் ரூ.26 லட்சம் மோசடி
- ஈரோட்டில் சிமெண்ட் விற்பனை செய்ததில் ரூ.26 லட்சம் மோசடி செய்தது தெரியவந்தது.
- புகாரின் பேரில் கோவை ராமநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சபரீசனை கைது செய்தனர்.
கோவை.
கோவை ராமநாதபுரம், சக்தி நகரை சேர்ந்தவர் ராதா (வயது 67). இவர் கோவை ராமநாதபுரத்தில் உள்ள தனியார் சிமெண்டு நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார்.
இவர் கோவை ராமநாதபுரம் போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-
கோவை பொள்ளாச்சி ஆறுமுகம் வீதியை சேர்ந்தவர் சபரீஸ்வரன்(35). நாமக்கல் ராசிபுரத்தை சேர்ந்தவர் குணசேகரன்(30).
இவர்கள் 2 பேரும் எங்கள் நிறுவனத்தில், விற்பனை அதிகாரிகளாக வேலை பார்த்து வருகின்றனர். கடந்த 3 வருடமாக சிமெண்ட் விற்பணை செய்ததில் பணம் கையாடல் செய்து இருப்பதாக சந்கேம் எழவே2 பேரையும் அழைத்து விசாரித்ததோம்.
அப்போது அவர்கள் ஈரோட்டில் சிமெண்ட் விற்பனை செய்ததில் ரூ.26 லட்சம் மோசடி செய்தது தெரியவந்தது.இது தொடர்பாக நான் அவர்களிடம் கேட்டபோது, சபரீஸ்வரன் என்னை தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடு த்தார். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.
புகாரின் பேரில் கோவை ராமநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சபரீசனை கைது செய்தனர்.
பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.






