என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவையில் 21-ந்தேதி அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
    X

    கோவையில் 21-ந்தேதி அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

    • முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி கொறடாவுமான எஸ்.பி. வேலுமணி தலைமை தாங்கி பேசுகிறார்.
    • அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

    கோவை,

    கோவை மாநகர், மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் அம்மன் அர்ச்சுனன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தியும், தி.மு.க. அரசை கண்டித்தும் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆணைக்கிணங்க கோவை ஒருங்கிணைந்த மாவட்ட அ.தி.மு.க. சார்பில் வருகிற 21-ந் தேதி காலை 10 மணிக்கு கோவை செஞ்சிலுவை சங்கம் முன்பு ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

    இதற்கு முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி கொறடாவுமான எஸ்.பி. வேலுமணி தலைமை தாங்கி பேசுகிறார்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் தலைமை கழக நிர்வாகிகள், இன்னாள், முன்னாள் எம்.பி., எம்.எல்.ஏக்கள், எம்.ஜி.ஆர். மன்றம், ஜெயலலிதா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, இலக்கிய அணி, வர்த்தக அணி, கட்டுமான தொழிற்சங்கம், மருத்துவர் அணி, அமைப்பு சாரா ஓட்டுனர் அணி, இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை, தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட நிர்வாகிகள், பகுதி செயலாளர்கள் உள்பட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் அனைவரும் திரளாக பங்கேற்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    Next Story
    ×