search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கலெக்டர் விஷ்ணு.
    X
    கலெக்டர் விஷ்ணு.

    கால்வாயில் குப்பை கொட்டுவதை தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்-கலெக்டர் விஷ்ணு பேட்டி

    கால்வாயில் குப்பை கொட்டுவதை தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு கூறினார்.
    நெல்லை:

    நெல்லை டவுன் கல்லணை பள்ளி அருகே கால்வாய் தூர்வாரும் பணியை கலெக்டர் விஷ்ணு தொடங்கி வைத்து நிருபர்களிடம் கூறியதாவது:-

    மாவட்டத்தில் உள்ள பாளையங்கால்வாய், நெல்லை கால்வாய் மற்றும் கோடகன் கால்வாய் ஆகியவை தூர்வாரும் பணி இன்று தொடங்கி உள்ளது. 42.5 கிலோ மீட்டர் தூரம் கொண்ட பாளையங்கால்வாய் மூலமாக 9500 ஏக்கரும், 24.6 கிலோ மீட்டர் தூரம் கொண்ட கோடகன் கால்வாய் மூலம் 6 ஆயிரம் ஏக்கரும், 28.4 கிலோ மீட்டர் தூரம் கொண்ட நெல்லை கால்வாய் மூலம் 6410 ஏக்கரும் பாசன வசதி பெறும்.

    தற்போது கால்வாய்கள் தூர்வாருவதன் மூலமாக நெல்லை, பாளை, மானூர் ஆகிய தாலுகாக்களில் உள்ள 21 ஆயிரத்து 910 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். அரசின் உத்தரவின் அடிப்படையில் வருகிற 1-ந்தேதி அணையில் இருந்து நீர் திறப்பது குறித்து முடிவு செய்யப்படும்.

    இந்த ேகாடை காலத்தில் அவ்வப்போது மழை பெய்து வந்ததால் தூர்வாரும் பணியை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது. தற்போது நிலவரப்படி 75 சதவீத குளங்களில் நீர் இருப்பு உள்ளது.

    வடகிழக்கு பருவமழைக்கு இன்னும் 4 மாதங்கள் உள்ளது என்பதால் அதற்குள் 3 கால்வாய்களயும் முழுவதுமாக தூர்வார திட்டமிட்டு உள்ளோம். அந்தநேரத்தில் கால்வாய் ஆக்கிரமிப்புகளும் அகற்றப்படும். பொதுமக்கள் கால்வாயில் குப்பை கொட்டுவதை தவிர்க்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

    தற்போது கால்வாய் அனைத்தையும் தூர்வாருவதால் வரும் மழை காலங்களில் மாநகர பகுதியில் வெள்ள பாதிப்பு நிச்சயமாக ஏற்படாது. போர்கால அடிப்படையில் தூர்வாரும் பணி நடைபெறும்.
    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×