என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்

X
கோப்புப்படம்
பெண்ணிடம் செயின் பறிக்க முயன்ற கேரள வாலிபர் கைது- சி.சி.டி.வி. காமிரா மூலம் சிக்கினார்
By
மாலை மலர்26 May 2022 8:51 AM GMT (Updated: 26 May 2022 8:51 AM GMT)

நெல்லையில் பெண்ணிடம் செயின் பறிக்க முயன்ற கேரள வாலிபர் கைது செய்யப்பட்டார்.
நெல்லை:
நெல்லை வண்ணார்பேட்டை இளங்கோநகரை சேர்ந்தவர் அறிவழகன். இவரது மனைவி பார்வதி. இவர் சம்பவத்தன்று இரவு வண்ணார்பேட்டையில் இருந்து வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து சென்ற ஒரு வாலிபர் பார்வதி கழுத்தில் கிடந்த செயினை பறிக்க முயன்றார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் கத்தி கூச்சலிட்டவாறு செயினை இறுக்கமாக பிடித்துக் கொண்டார்.
இதில் செயின் அறுந்து சாலையில் விழுந்தது. அப்போது சத்தம் கேட்டு பொதுமக்கள் திரண்டதால் அந்த வாலிபர் அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பி சென்றார்.
இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. காமிரா காட்சிகளை கொண்டு மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டனர்.
அதில் அவர் கேரளாவை சேர்ந்த பட்டதாரி வாலிபரான ரித்திக் (வயது 22) என்பதும், வி.எம். சத்திரத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு விடுமுறையில் வந்தபோது செலவிற்கு பணம் இல்லாததால் செயின் பறிப்பு முயற்சியில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்த ரித்திக்கை போலீசார் கைது செய்தனர். மேலும் போலீசாரின் விசாரணையில் பார்வதி அணிந்திருந்தது கவரிங் நகை என்பது தெரியவந்தது. எனினும் குற்ற செயலில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Next Story
×