என் மலர்
உள்ளூர் செய்திகள்

அமைச்சர் பொன்முடி
வரும் கல்வியாண்டில் 10 இடங்களில் நேர்முக கலந்தாய்வு- அமைச்சர் பொன்முடி தகவல்
அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் முறையில் கலந்தாய்வு நடைபெற்று வரும் நிலையில், அதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வருவதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறினார்.
சென்னை:
அண்ணா பல்கலைக்கழகத்தில், வரும் ஆண்டில் நேரடி கலந்தாய்வு நடத்த அரசு பரிசீலித்து வருவதாக அமைச்சர் பொன்முடி சட்டபேரவையில் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரத்தின்போது விளக்கம் அளித்து பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் முறையில் கலந்தாய்வு நடைபெற்று வரும் நிலையில், அதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வருவதாக கூறினார்.
அதனை தவிர்க்கும் பொருட்டு வரும் கல்வியாண்டில் 10 இடங்களில் ‘நேர்முக கலந்தாய்வு’ நடத்த அரசு பரிசீலனை செய்து வருவதாக கூறியுள்ளார்.
மேலும் கலை அறிவியல் கல்லூரிகளுக்கு மொத்தமாக கவுன்சிலிங் நடத்தும் திட்டம் ஏதும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Next Story