search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வரி
    X
    வரி

    புவனகிரி பகுதியில் நில வரி வசூலில் மெத்தனம் காட்டும் கிராம நிர்வாக அலுவலர்கள்

    விவசாயிகள் கிராம நிர்வாக அலுவலரிடம் நாம் சென்று பட்டா சிட்டா அடங்கல் போன்றவை அரசு நிவாரணம் போன்றவைகள் வாங்குவதற்கு அடிக்கடி செல்ல வேண்டி உள்ளதால் அவரை கடுமையாக கேட்க முடியாது.

    புவனகிரி:

    புவனகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள ஏராளமான கிராமங்கள் உள்ளது. அந்த கிராமங்களில் விவசாயிகள் பல்வேறு வகையான உணவுப் பொருள்கள் பயிர் செய்து வருகின்றனர்.

    இவர்களில் பெரும்பாலான விவசாயிகள் வங்கி மூலம் மற்றும் கூட்டுறவு தொடக்க வேளாண்மை சங்கத்தின் மூலமும் கடனுதவி பெற்று விவசாயம் செய்து வருகின்றனர். இதற்கு கிராம நிர்வாக அலுவலர்கள் நிலத்திற்கு உரிய இடங்கள் மற்றும் பட்டா மாறுதல் போன்ற சான்றுகள் அளித்த தன் பெயரில் வங்கியில் கடன் கொடுக்கிறார்கள்.

    ஒவ்வொரு ஆண்டுக்கும் வரும் கிராம நிர்வாக அலுவலர்கள் அந்த கிராமத்திற்கு சென்று விவசாயிகளிடம் ஒரு ஏக்கருக்கு உரிய நிலவரியை வாங்குவது வழக்கம். இதனை ஜமாபந்தியில் கணக்கு தணிக்கை செய்வார்கள். தற்போது எந்த ஒரு கிராம நிர்வாக அலுவலரும் விவசாயிகளிடம் சென்று நிலவரி வசூல் செய்வது உதாரணமாக அவர்கள் அந்தந்த விவசாயிகளிடம் நேரில் சென்று உங்களுக்கு எத்தனை ஏக்கர் உள்ளது இதற்கு இவ்வளவு தொகை செலுத்துங்கள் என்று கூறி அதற்குரிய தொகையை பெற்று அதற்கு ரசீது கொடுக்க வேண்டும். இதுதான் வழக்கமாக உள்ளது.

    இதனை பின்பற்றாமல் ஒரு சில கிராம நிர்வாக அலுவலர்கள் உரிய தொகைக்கு அதிகமாக பணத்தைப் பெற்றுக்கொண்டு ரசீது தருகிறேன் என்று கூறிவிட்டு வந்து விடுகின்றனர். அதற்கு ரசீது கொடுப்பது கிடையாது. விவசாயிகள் கிராம நிர்வாக அலுவலரிடம் நாம் சென்று பட்டா சிட்டா அடங்கல் போன்றவை அரசு நிவாரணம் போன்றவைகள் வாங்குவதற்கு அடிக்கடி செல்ல வேண்டி உள்ளதால் அவரை கடுமையாக கேட்க முடியாது.

    உரிய ரசீது கொடுப்பதில்லை.இதற்கான அக்கறையும் காட்டுவதில்லை. இதனால் அரசுக்கு பல லட்சம் ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுகிறது.

    இதனை அலட்சியமாக கிராம நிர்வாக அலுவலர்கள் வேலைப்பளு என்று வாங்காமல் பல்வேறு காரணங்களைக் காட்டி தவிர்த்து விடுகின்றனர். இது குறித்து தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்தால் அரசுக்கு வருவாயும் விவசாயிகளுக்கு நன்மையும் உண்டாகும்.

    இல்லை என்றால் ஆன்லைன் இ- சேவை மையம் மூலம் மின்சார கட்டணம் போன்று விவசாயிகளுக்கு நிலவரி கட்டுவதற்கு தமிழக அரசு அதற்குரிய ஒரு ஆப்பை தயார் செய்து கொடுத்து அதில் பெயர், பட்டா எண், ஊர் தெரிவித்து இசேவை மூலம் பணம் செலுத்தும் வசதியை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். இதனால கிராம நிர்வாக அலுவலர் பற்றாக்குறையையும் தவறு செய்வதும் தவிர்க்கப்படும்.

    Next Story
    ×