search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
    X
    அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

    கலெக்டர் அலுவலகங்களில் போலி சான்றிதழை கண்டறிய ஏற்பாடு- அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

    அஞ்சல் துறையில் 500-க்கும் மேற்பட்ட போலி சான்றிதழ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.
    சென்னை:

    சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் இந்திய கூட்டமைப்பு தொழில்முனைவோர் மாநாடு நடைபெற்றது.

    இதில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு பேசியதாவது:-

    நம்முடைய நாட்டில் முதலீட்டாளர்களின் முகவரி தமிழ்நாடு ஆக விளங்க காரணம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின். 70 ஆயிரம் கோடிக்கு மேல் தமிழகத்தில் முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது. இளைஞர்களுக்கு நம்பிக்கை அளிக்கக் கூடிய அரசாக இந்த அரசு இருக்கும்.

    தமிழ்நாட்டில் கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை பெறுவது குறித்து விழிப்புணர்வு தேவைப்படுகிறது. முதல் தலைமுறை தொழில் முனைவோர் கவனமுடன் அடியெடுத்து வைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கொரோனா தொற்று மீண்டும் பரவுகிறது. முதல்-அமைச்சர் அலுவலகத்தில் மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை மேற்கொண்ட பிறகு சொல்லும் வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக் கல்வித்துறை பின்பற்றும்.

    பள்ளிகளில் மூர்க்கமாக செயல்படும் மாணவர்களும், நல்லவர்கள். “எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே. அவன் நல்லவன் ஆவதும், தீயவன் ஆவதும் அன்னை வளர்ப்பதிலே” என்ற பாடலை முன்னுதாரணமாகக் கொண்டு 2-வது அன்னையாக விளங்கக்கூடிய ஆசிரியர்கள்தான் மாணவர்களை திருத்த வேண்டும்.

    பள்ளிகளில் மாணவர்களுக்கு கவுன்சிலிங் அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை பாடத்திட்டம் மாற்றப்படுகிறது. அதன் அடிப்படையில் மாணவர்களின் தேவைக்கேற்ப பாடத்திட்டத்தில் மாற்றம் செய்யப்படும்.

    போலி சான்றிதழ் அஞ்சல் துறையில் அதிக அளவில் கண்டறியப்பட்டுள்ளது. 500-க்கும் மேற்பட்ட போலி சான்றிதழ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    அரசு அலுவலகங்களில் இருந்து அதிகப்படியான சான்றிதழ் சரி பார்ப்புக்காக அனுப்பப்படுகிறது. அதனால் அந்தந்த மாவட்ட கலெக்டர் அலுவலகங்களிலேயே சான்றிதழ் சர் பார்ப்பதற்கான ஏற்பாடு செய்யப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.



    Next Story
    ×