search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    .
    X
    .

    இந்திய அரசின் சிமெட் நுழைவு தேர்வு விடைத்தாள், விடை குறிப்புகள் வெளியீடு

    இந்திய அரசின் சிமெட் நுழைவு தேர்வு விடைத்தாள், விடை குறிப்புகள் வெளியானது.
    சேலம்:

    இந்திய அரசின் தேசிய தேர்வு முகமை சார்பில்  பொது மேலாண்மை சேர்க்கை நுழைவு தேர்வு (சிமெட்)- 2022 நாடு முழுவதும் நடத்தப்பட்டது. கடந்த 9 -ந்தேதி கணினி வழியாக இந்த தேர்வு நடத்தப்பட்டது. இதில் சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, ஈரோடு, கரூர் உள்ளிட்ட பகுதியை சேர்ந்த பட்டதாரிகள் பங்கேற்று எழுதினர்.

    இந்த நிலையில் தற்போது தேசிய தேர்வு முகமை தற்காலிக  பதில்கள்,  வினாத்தாளுடன்  பதிவேற்றம் செய்துள்ளது. அதில் விண்ணப்பதாரர்கள் எழுதிய விடைத்தாள் மற்றும் அவர்கள் பதிவு செய்த பதில்கள்  இடம் பெற்றுள்ளன. 

    தேசிய தேர்வு முகமை வழங்கிய இந்த விடை குறிப்புகள் மற்றும் கேள்விகளில்  தவறாக இருந்தால் விண்ணப்பதாரர்கள் கட்டணம் செலுத்தி உரிய ஆதாரங்களுடன் அதை சவால் செய்ய கால அவகாசம்  வழங்கப்பட்டது. ஒரு கேள்விக்கு ரூ.200  செலுத்த வேண்டும். இந்த கட்டணம் திரும்ப பெற முடியாது.  இதற்கான கடைசி தேதி நேற்று இரவு 11:50 மணியுடன் முடிவடைந்தது. 

    தாக்கல் செய்யப்பட்ட சவால்களை நிபுணர்களால் ஆய்வு செய்யப்பட்டு, இறுதி விடை குறிப்புகள் வெளியிடப்படும்.
    Next Story
    ×